Skip to main content

“இதை என் வாழ்நாளில் பார்த்ததில்லை” - கே.என்.நேரு

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

“34 thousand crores for the agriculture sector; I have never seen this in my life” KN Nehru

 

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக எதுவும் செய்யவில்லை எனவும் வேளாண் துறைக்கு 34 ஆயிரம் கோடி ஒதுக்கி நான் வாழ்நாளில் பார்த்ததில்லை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

 

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் அவர் பேசிய போது, “தொடர்ந்து சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு முதல்வர் நல்ல பணிகளை செய்து கொண்டுள்ளார். வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தந்துள்ளார். வேளாண் துறைக்கு 34 ஆயிரம் கோடி ஒதுக்கி நான் வாழ்நாளில் பார்த்ததில்லை. முதன் முதலில் நான் அமைச்சராகும் போது தமிழ்நாட்டின் பட்ஜெட் வெறும் 50 ஆயிரம் கோடி தான். இன்று வேளாண் துறைக்கு மட்டும் 34 ஆயிரம் கோடி தந்துள்ளார். 10 ஆண்டுகாலம் அதிமுக எதையும் செய்யவில்லை. எல்லா நகரங்களிலும் பேருந்து நிலையம் எல்லா நகரங்களிலும் மார்கெட் அனைத்து மக்களுக்கும் வசதிகள் கிடைக்க வழிவகை செய்துள்ளார்” என கூறினார்.

 

மேலும் பேசிய அவர், “மழைநீர் வடிகால் 1100 கிலோ மீட்டர் அளவிற்கு நடைபெறுகிறது என சொன்னால் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடைபெறுகிறது. இது இங்கு மட்டுமல்ல ஒவ்வொரு நகரங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் 1400 கோடி பணம். இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 1400 கோடி பணம் அனைத்து மக்களும் வசதி வாய்ப்புடன் இருக்க வேண்டும் என சொல்லி அதை செய்து கொண்டிருக்கிறார். இந்த நகர்ப்புற வளர்ச்சித் துறை கலைஞர் பார்த்த துறை என்பதால் தனி கவனத்துடன் செயல்படுகிறார்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“திமுக ஆட்சிக் காலத்தில்தான் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Minister K.N. Nehru says All projects have been completed during DMK regime

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து லால்குடியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, “தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி செய்யும் காலத்தில் தான் தமிழகத்தில் எந்த திட்டங்கள் வந்தாலும் லால்குடி தொகுதிக்கு நிறைவேற்றப்படும். கொள்ளிடம் பாலம், விவசாய கல்லூரியில் கலைக் கல்லூரி, மகளிருக்கான ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் கல்லூரி என பல்வேறு அடிப்படை தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது, நீதிமன்ற வளாகம், நகராட்சி அலுவலகம்,  பேரூராட்சி அலுவலகம், திருச்சி - சென்னை சாலை மற்றும் சிதம்பரம் சாலையை இணைக்கும் வகையில்புதிய இணைப்புச் சாலைகள் நடைபெற அதற்கான ஆயத்த பணியில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதுபோல புதிய பல்வேறு திட்டங்கள் லால்குடி சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட உள்ளன. அ.தி.மு.க ஆட்சியில் பத்தாண்டுகளில் லால்குடி சட்டமன்றத் தொகுதியை அ.தி.மு.க புறக்கணித்து எந்த திட்டமும் நிறைவேற்றப்படாமல் புறக்கணித்து வந்தன. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி எப்பொழுதெல்லாம் ஆட்சி செய்கிறதோ அப்பொழுதெல்லாம் லால்குடியில் வளர்ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது” என்றி பேசினார். அதனைத் தொடர்ந்து மணக்கால், ஆங்கரை, திருமங்கலம், வாளாடி புது ரோடு, புதுக்குடி, சிறு மருதூர், மகிழம்பாடி, நெய் குப்பை, புதூர் உத்தமனூர், தச்சங்குறிச்சி பல்லபுரம், பூவாளூர் பேரூர் கழகம் உட்பட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தனர்.

வாக்கு சேகரிக்கும் போது மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, லால்குடி எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை, லால்குடி நகர் மன்ற தலைவர் துணைமாணிக்கம், ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன்,  மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் குரு அன்பு செல்வன், புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநில செயலாளர் கேப்டன் சுபாஷ்ராமன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.