ஜெயங்கொண்டம் அருகே இன்று காலை தா.பழூரில், அனைத்து கட்சிகள் சார்பில், தமிழகத்தில் தந்தை பெரியார் சிலைகளை உடைப்போம் என்று சொன்ன ஹச்.ராஜா அவர்களை கண்டித்து தி.மு.க ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும், கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இரா.உலகநாதன், காங்கிரஸ் வட்டார தலைவர் க.சக்கரைவர்த்தி, ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் கிருஷ்ண.கொளஞ்சியப்பன், சி.பி.ஐ ஒன்றிய செயலாளர் எஸ்.அபிமன்னன், திராவிடர் கழக ஒன்றிய தலைவர் சொ.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய எச். ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி, கண்டனம் தெரிவித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட கழக செயலாளர் அங்கயற்கண்ணி தலைமையில், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் முன்னிலையில், கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் எச்.ராஜா கொடும்பாவி எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.