/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/wq.jpg)
சிதம்பரம் தலைமை அஞ்சல் நிலையம் வாயிலில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வேளாண் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சிதம்பரம் நகரச் செயலாளர் எல்லாளன் தலைமை தாங்கினார்.
இதில் தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர், உழவர் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 30 பேர் கலந்து கொண்டு வேளாண் மசோதா நகலை எரிக்க முயற்சி செய்தனர்.
அப்போது, சிதம்பரம் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் அனைவரையும் கைது செய்ய முயற்சித்தனர். இந்நிலையில் வேளாண் மசோதா சட்ட நகலை திடீரென கூட்டத்தில் இருந்தவர்கள் எரித்தனர். இதனைக் காவல்துறையினர் தடுத்து,போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோராட்டக்காரர்கள், இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டு சட்ட நகல்களைக் கிழித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)