Skip to main content

3 பல்கலை. துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழு அமைப்பு

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

3 University Composition of Search Committee for Appointment of Vice-Chancellor

 

தமிழக அரசின் சார்பில் செயல்பட்டு வரும் சென்னை பல்கலைக்கழகம் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதே சமயம் துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவரும் ஆளுநர் தரப்பில் ஒருவரும் இடம்பெறுவர். இந்த குழுவினர் தான் துணைவேந்தர்களைத் தேர்வு செய்து ஆளுநருக்குப் பரிந்துரை செய்வார்கள்.

 

இந்த சூழலில் துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிபந்தனை விதித்திருந்தார். ஆளுநரின் இந்த  நிபந்தனைக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் எழுதி இருந்த கடிதத்தில், யூஜிசி விதிகளின் படி, மாநில பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் யுஜிசி விதிகளின் படி, மாநில பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரை ஆளுநர் ஆர். என். ரவி நியமித்துள்ளார். இது மட்டுமின்றி துணைவேந்தர் தேடுதல் குழுவில் வழக்கத்திற்கு மாறாக முதல் முறையாக யூஜிசி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களோடு 4 பேரை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தேடுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக யூசிசி பிரதிநிதியாக சுஷ்மா யாதவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்