3 persons including 2 boys arrested for serial bike theft

திருச்சி வளையல்கார தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(36). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் எதிரே நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் மறுநாள் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதேபோல் திருச்சி வரகனேரி ஆனந்த புரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 46). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து இருவரும்காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீசாரிடம்புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிள்களை திருடியது அரியமங்கலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் பாலக்கரை வி.எம் பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 20) ஆகியோர் எனத்தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.