Skip to main content

பட்டாசு கடையில் பட்டாக் கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டல்- மூவர் கைது

 

 3 people were arrested for threatening people firecracker shop

 

சென்னை அமைந்தகரை பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பட்டாசு கடையில் பட்டாக்கத்தியை காட்டி மாமூல் கேட்ட ரவுடிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை அமைந்தகரை ஃபுல்லா அவன்யூ மார்க்கெட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு சில கடைகள் பட்டாசு கடைகளாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை பட்டாசு கடை ஒன்றிற்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் பட்டாக் கத்தியை காட்டி கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டுள்ளனர்.

 

உரிமையாளர் பணம் தர மறுக்கவே கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எடுக்க முயன்றனர். கடையின் உரிமையாளரும் அங்கிருந்து பொதுமக்களும் சேர்த்து அவர்களை விரட்டியுள்ளனர். அதன்பிறகு கடை உரிமையாளரை அந்த கும்பல் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளது. இதுதொடர்பாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகார் அடிப்படையில் கடையில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போலீசார் பிரகாஷ், நீலேஷ்குமார், சென்ட்ரல் ராஜா ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !