Skip to main content

கோடை விடுமுறை; ஊர் திரும்பியபோது மூவர் பலி!

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

3 passed away car accident in Walajapet

 

சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திருமால். வேலூர் விரிஞ்சிபுரத்தில் உறவினர் வீட்டில் நடைபெற்ற காரிய நிகழ்வில் பங்கேற்று விட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பியுள்ளார். சரியாக வாலாஜாப்பேட்டை அடுத்த குடிமல்லூர் அருகே மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கிய போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நெடுஞ்சாலை ஓரத்தில் கிரீஸ் அடிப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்கானது. இந்த விபத்தில் திருமால், அவரது சகோதரி எழிலரசி மற்றும் ஓட்டுநர் அஜய் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

 

மேலும் காரிலிருந்த ஒரு சிறுவன் மற்றும் இரு சிறுமிகள் உடலில் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார், உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த விபத்து சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த திருமால் வேலூர் விரிஞ்சிபுரத்தில் உள்ள தனது அக்கா எழிலரசி வீட்டில் கோடை விடுமுறையை கழித்து விட்டு திருமாலின் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பிள்ளைகளான தருண், தரணிகா, தனுஷ்கா, அக்கா எழிலரசி, திருமால் மற்றும் ஓட்டுநர் உட்பட 6 பேர் காரில் சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது வாலாஜா அருகே முன்னே சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

‘என் காதலிய என்னோட அனுப்புங்க’ -  இன்னொருவர் மனைவியை வம்புக்கு இழுத்த இளைஞர் 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 youth threatens to send someone else  wife with him

 

நாகப்பட்டினம் காடாம்பாடி மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நேசமணி. இவர் மீது நாகை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் குற்ற பின்னணி உடையவர்கள் பட்டியலிலும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் அருகே, அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் கத்தியை வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும், பொது மக்களையும் கத்தியால் குத்துவதற்கு பாய்ந்து சென்றதால், பொது மக்கள் அச்சமடைந்து நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

 

மேலும் அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்தி ஓட்டுனரை குத்த பாய்ந்து ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த வெளிப்பாளையம் போலீசார்  அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட போது போலீசாரையும் கத்தியால் குத்த முற்பட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தன்னை பிடித்தால் கழுத்தை அறுத்துக் கொள்வதாக பயமுறுத்திய அவர், தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் வழிய, வழிய பொது மக்களையும் குத்துவதற்கு பாய்ந்தார். இதற்கு பயந்து வாகன ஓட்டிகள் வண்டிகளை நிறுத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

தொடர்ந்து பொது மக்கள் உதவியுடன் மடக்கி பிடித்த போலீசார் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை எடுக்க மறுப்பு தெரிவித்து தப்பிக்க முயன்றார். அவரை துரத்தி பிடிக்க சென்ற போலீசாரை மருத்துவமனை வாசலிலே வைத்து துரத்தி துரத்தி கத்தியால் குத்த பாய்ந்த வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் மருத்துவமனை வளாகமே பரப்பரப்பானது. 

 

தொடர்ந்து மடக்கி பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றனர். விசாரணையில், 6 வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணிற்கு வேறு ஒருவரோடு திருமணம் ஆன நிலையில் கடந்த 2 வருடமாக அதே பெண்ணோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவன் வெளிப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது விசாரணைக்கு வந்தவர், அந்த பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்குமாறு ரகளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

 

நாகையில் முன்னாள் காதலியும் இன்னொரு மனைவியான பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்க சொல்லி கத்தியால் பொது மக்கள் மற்றும் போலீசாரையும் குத்த பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

குப்பைகள் போல மிதக்கும் கார்கள்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Cars floating like garbage

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு - வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் கார்கள் குப்பை போல மிதக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழை நீரில் அடித்து செல்லப்பட்ட கார்கள், தாம்பரத்தை அடுத்த கிஷ்கிந்தா சாலையின் ஓரத்தில் குப்பை போல மிதக்கின்றது. வண்டலூரில் இருந்து மீஞ்சூர் செல்லும் வெளிவட்ட சாலையின் ஓரத்தில் தேங்கிய மழை நீரில் கார்கள் மிதக்கும் காட்சிகள் வெளியான நிலையில், பலரும் அங்கு வந்து மிதக்கும் கார்களை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்