Skip to main content

31 நாட்களில் 2,423 பேர் கைது... ஆப்ரேசன் கஞ்சா 2.0 திட்டத்தில் அதிரடி!

Published on 28/04/2022 | Edited on 28/04/2022

 

 2,423 arrested in 31 days ... Action on Operation 2.0!

 

தமிழகத்தில் கடந்த 31 நாட்களில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தின் காவல்துறை டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றதிலிருந்து சில அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் வைத்திருந்த கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

 

அதனைத்தொடர்ந்து குட்கா, கஞ்சா விற்போரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி கடந்த மாதம் 23 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகே போதை பெருட்கள் விற்பனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பார்சல் மூலம் போதை பொருட்கள், போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களை தனிப்படை அமைத்து பிடிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை வாயிலாக உத்தரவு பிறப்பித்திருந்தார். குட்கா, கஞ்சா கடத்தல், பதுக்கல் சங்கலியை ஒழிக்க 'ஆப்ரேசன் கஞ்சா 2.0' என்ற அந்த திட்டம் தொடங்கப்பட்டு அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில் இன்று தமிழக போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், தமிழகத்தில் கடந்த 31 நாட்களில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இதுவரை 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 10 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களிலும் கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.