Skip to main content

கூட்டுறவு வங்கியில் 2.39 கோடி போலி நகைக்கடன்கள்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

2.39 crore fake jewelery loans in Co-operative Bank!

 

கூட்டுறவு நகர வங்கியில் சுமார் ரூபாய் 2.39 கோடி அளவில் போலி நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆரணி இணைப்பதிவாளர் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. 

 

இதுகுறித்து ஆரணி இணைப்பதிவாளர் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் சுமார் 2.39 கோடி ரூபாய் அளவில் போலி நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. போலி நகைக்கடன் வழங்க உறுதுணையாக இருந்த வங்கி பணியாளர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 77 நபர்களுக்குப் போலி நகைக்கடன்கள் வழங்கியதற்தாக ஆரணி வங்கிப் பணியாளர்கள் மூன்று பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு தொடர்பாக ஆரணி வங்கி மேலாண் இயக்குநர் கல்யாண்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், போலி நகைகளை வைத்து மோசடி செய்தவர்களின் பெயர், பெற்றுக்கொண்ட தொகை குறித்த அனைத்து விவரங்களும் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்