Skip to main content

21 தமிழக மீனவர்கள் கைது; தொடரும் அட்டூழியம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

21 Tamil Nadu fishermen arrested; Continued atrocities

 

மிக்ஜாம் புயல் காரணமாக பல நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், நேற்று கடலுக்கு சென்ற மீனவர்கள் 21 பேர் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த மாதம் 27 ஆம் தேதியிலிருந்து புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, நேற்று மீன் பிடிக்கச் சென்றனர்.

 

நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை மன்னார் - கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 17 பேரைக் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இன்று தற்போது ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மொத்தம் 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த 21 மீனவர்களில் 13 பேர் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள், 8 பேர் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்