Skip to main content

தி.மு.க தேர்தல் அறிக்கை குழு கூட்டம் தொடங்கியது!

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

2021 tn assembly election dmk party manifesto team discussion

 

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

 

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி., அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி., சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 

இந்தக் குழு, 2021- ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்பாளர் பட்டியல்; தேர்தல் அறிக்கை; தீவிரம் காட்டும் திமுக

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 List of Candidates; Election Report;DMK

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவிருக்கும் நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று நண்பகல் 12:00 மணிக்கு காணொளி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வாயிலாக நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று நடைபெற இருக்கும் அந்த கூட்டத்தில் சென்னையில் மூன்று இடங்கள் என மொத்தம் 21 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிடும் பகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்ற பட்டியலும் அதே போல் திமுகவின் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்? - ஆலோசனையைத் தொடங்கிய திமுக

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Which constituency for alliance parties?-DMK started consultation

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு முடிந்துள்ளது. காங்கிரஸ்-10 தொகுதி, மார்க்சிஸ்ட்- 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் -2 தொகுதி, ஐ.யூ.எம்.எல்- 1 தொகுதி, கொ.ம.தே.க-1 தொகுதி, மதிமுக-1 தொகுதி, விசிக-2 தொகுதி, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தொடர்ந்து திமுக, ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர் நேர்காணலை நடத்தியது.

இந்நிலையில், இன்று கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணுவதற்கான ஆலோசனை தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளைப் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது தொடர்பாக இன்று ஆலோசனை தொடங்கிய நிலையில் மதுரையும், திண்டுக்கல் தொகுதியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பின் போது தெர்வித்தார்.

தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் அண்ணா அறிவாலயம் வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில், மீண்டும் நாகை, திருப்பூரில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.