
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக 'ஆபரேஷன் கஞ்சா' என்ற திட்டத்தில் தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருவதோடு, விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் லாரியில் பதுக்கி வைக்கப்பட்ட 2,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வேலவன் புது குளத்தில் தனியார் தோட்டத்தில் நின்றுகொண்டிருந்த லாரியில் இருந்த 2,000 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் மதுரை மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 7 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.