Skip to main content

200 ஏக்கர் நெற்பயிர் மழை நீரில் மூழ்கி சேதம்; விவசாயிகள் வேதனை!

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
200 acres of paddy crop damage due to rain water inundation

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையினால் சங்கராபுரம் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள், விவசாய கிணறுகள் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்த நிலையில் பூட்டை, தியாகராஜபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அறுவடைக்குத் தயாராகும் நிலையில் இருந்த 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு  உரிய நிவாரணம் வழங்க  வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Chance of rain in 20 districts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 20 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று (15.07.2024) காலை 10 மணிக்குள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Chance of rain in 13 districts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று (13.07.2024) இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே சமயம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம், ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.