2 goats attacked in leopard attack near Thalavadi

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, மற்றும் புலிகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு , காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

Advertisment

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜமீல் ஷெரீப், 5 ஆடுகளை வழக்கம்போல தனது நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். நேற்று மாலை ஆட்டை பிடிக்கச் சென்றபோது தனது 2 ஆடுகள் கடிபட்டு இறந்து கிடந்தது. இதுபற்றி தாளவாடி வனத்துறையினர் தகவலளித்தார் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை இறந்த ஆடுகளை ஆய்வு செய்தனர் அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஆடுகளை கடித்துக் கொன்றது தெரியவந்தது. சிறுத்தை ஆடுகளை கடித்து கொன்ற சம்பாதித்தால் அவர் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment