2 Chennai IT employees lose their live in Parangipet sea wave

சிதம்பரம், பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் கூடுவாஞ்சேரியில் உள்ள ஜோ.கோ கார்ப்பரேசன் ஐடி கம்பெனியில் பணிபுரியும் கணினி பொறியாளர்கள் ஷாம் சுந்தர் (26) கோகுல் பிரசாத் (26) பொள்ளாச்சியைச் சேர்ந்த இவர்கள் கூடுவாஞ்சேரியில் தங்கி பணி செய்து வருகிறார்கள்.

Advertisment

இவர்களுடன் 2 ஆண் மற்றும் 2 பெண் நண்பர்கள் என மொத்தம் 6 பேர்பாண்டிச்சேரியில் இருந்து கார் மூலம் பிச்சாவரம் சுற்றுலா தளத்திற்கு சென்று படகு சவாரி செய்துவிட்டு பின்னர் சாமியார் பேட்டை கடற்கரைக்கு குளிக்க வந்துள்ளனர்.அப்போது ஷாம் சுந்தர் மற்றும் கோகுல பிரசாத் ஆகியோர் கடல் அலையில் சிக்கி அடித்து சென்றுள்ளனர். இதனைப் பார்த்தவர்கள் அவர்களை மீட்டு 108 அவசர ஊர்திமூலம் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment