Skip to main content

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து இறந்த 2 சிறுவர்கள் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க சி.பி.எம் கோரிக்கை! 

Published on 02/08/2020 | Edited on 02/08/2020
2 boys who fell in a septic tank and died Rs. CPM demands Rs 20 lakh compensation

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வீட்டின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து ஒரே வீட்டைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும்வழங்க சி.பி.எம் வலியுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் செட்டித்தெரு விட்டல்தாஸ் நகரைச் சேர்ந்தவர்கள் குமார், ராஜேஸ்வரி. இருவரும் கறம்பக்குடி பேரூராட்சியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். வாடகை வீட்டில் குடியிருந்து வரும் இவர்களுக்கு கிருத்திக்ரோஷன்(6), அரவிந்த்(5). என்ற 2 மகன்கள்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை  வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியின் மேல் ஏறி இருவரும் விளையாடியுள்ளனர். ஏதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டி உடைந்து இருவரும் உள்ளே விழுந்துள்ளனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை காணததால் பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். பின்னர், கழிவுநீர் தொட்டி அருகே சென்று பார்த்த பொழுது தொட்டி உடைந்து இருந்ததும், அதற்குள் இருவரும் மூழ்கி கிடைப்பதும் தெரியவந்தது.

 

2 boys who fell in a septic tank and died Rs. CPM demands Rs 20 lakh compensation


இருவரையும் மீட்ட உறவினர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதனை செய்தபோது இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர், இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை சிறுவர்களின் உடல்கள் கறம்பக்குடி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சிறுவர்களின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து எஸ்.சங்கர் செய்தியாளர்களிடம் கூறும் போது.. அரசு புறம்போக்கு இடத்தில் தனியார் ஆக்கிரமித்து இந்த கழிவுநீர்த் தொட்டியை அமைத்துள்ளனர். அருகிலேயே குடிநீருக்கான ஆழ்துளைக் கிணறும், நீர்த்தேக்கத் தொட்டியும் உள்ளது. இத்தகைய சூழலில் தனியார் அந்த இடத்தில் கழிவுநீர்த் தொட்டியை அமைக்க கறம்பக்குடி பேரூராட்சி நிர்வாகம் எப்படி அனுமதித்தது? பேரூராட்சி அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடும், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை  தொழிலாளர்களாக வேலை செய்யும் பெற்றோர் இருவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கட்சியின் மாவட்டக்குழு சார்பில் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திண்டுக்கல் தொகுதி இந்திய அளவில் முதலிடத்தில் வரவேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
"Dindigul Constituency should come first in India" Minister Chakrapani

திண்டுக்கல் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்குப்பட்ட அரங்கநாதபுரம், லெக்கையன்கோட்டை, சாலைபுதூர் சத்தியநாதபுரம், கே. அத்திகோம்பை, காளாஞ்சிபட்டி வெரியபூர், பழையபட்டி, திப்பம்பட்டி, கேதையூறும்பு, புலியூர்நத்தம், பி.என். கல்லுப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, குளிப்பட்டி, ஜவ்வாது பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் சிலிண்டர் ரூ.5 00க்கும், பெட்ரோல் ரூ. 75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட சம்பளம்  ரூ. 400 ஆக உயர்த்தப்படும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. வேலுச்சாமி, 5 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்த தேர்தலில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்குகளை பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்ற தொகுதியாக திண்டுக்கல் தொகுதி இடம் பெற வேண்டும்” என்று பேசினார். 

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.