2 agents of IFS financial company arrested!

Advertisment

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்தின் இரண்டு ஏஜெண்டுகளைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்தது தொடர்பாக, கடந்த ஜூலை மாதம் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தியதில் 80,000 பேர் 6,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, இந்த நிறுவனத்தின் ஐந்து இயக்குநர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், குப்புராஜ் மற்றும் ஜெகநாதன் ஆகிய இரண்டு ஏஜெண்டுகளை கைது செய்து இருக்கின்றனர். இதில் ஜெகநாதன் மட்டும் பொதுமக்களிடம் இருந்து சுமார் 200 முதல் 300 கோடி ரூபாய் வரை பணத்தைப் பெற்று, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது விசாரணையின் மூலமாக தெரிய வந்தது.

மேலும், குப்புராஜ் என்பவர் இந்த நிறுவனத்திற்காக எட்டு கோடி ரூபாய் வரை, பொதுமக்களிடம் இருந்து வாங்கி முதலீடு செய்துள்ளதாக காவல்துறைத் தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த நிறுவனத்தின் முக்கிய ஏஜெண்ட் சரவணன் என்பவரை, கடந்த ஆகஸ்ட் 12- ஆம் தேதி கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.