Skip to main content

பள்ளி மாணவி கடத்தல் வழக்கு; 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த திமுக பிரமுகர் கைது

 

A 16-year-old girl was arrested for serial vehicle theft

 

நாமக்கல்லில் பள்ளி மாணவி ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த திமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

திமுகவை சேர்ந்த சரவணன் என்பவர் நாமக்கல் மாவட்டம் பேரமாண்டபாளையம் ஊராட்சியில் எட்டாவது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது மகன் 16 வயது பள்ளி மாணவியைக் கடத்திச் சென்றதாக மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக விசாரிப்பதற்காக மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் திமுக பிரமுகர் சரவணன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்பொழுது சரவணன் மற்றும் அவரது தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து கடத்தலுக்கு துணை போனதாக திமுக பிரமுகர் சரவணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தேடி வந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த சரவணன் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !