Skip to main content

16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... புதிய மாவட்டங்களுக்கு எஸ்பிக்கள் நியமனம்!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

தமிழகத்தில் புதியதாக அறிவிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு எஸ்பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 16 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தில்லை நடராஜன் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று பொருளாதார குற்றப்பிரிவு இரண்டாவது பிரிவுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 

 16 IPS officers transferred ...

 

மேலும் அந்த அறிவிப்பின்படி, பாஸ்கரன் எஸ்பியாக பதவி உயர்வுபெற்று மதுரை மாநகர தலைமையகத்தினுடைய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். கியூ பிரான்ச் எஸ்பியாக மகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கியூ பிரான்ச் எஸ்பியாக இருந்த தர்மராஜன் தற்போது திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தின் எஸ்பியாக சுகுணா சிங், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக மயில்வாகனன், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக கண்ணன், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக பி.விஜயகுமார், கள்ளக்குறிச்சி எஸ்பியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.