Skip to main content

7 பேர் விடுதலையை வலியுறுத்தி தனிநபரின் 1,500-வது நாள் இணையவழிப் போராட்டம்!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

The 1500th day of the individual's online struggle to demand the release of 7 people


தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் அரசியல் செயலாளர் முனைவர் ஆ.ஜீவானந்தம் 1,500 நாட்களாக இணையவழி தனிநபர் போராட்டம் நடத்தி, இன்று தனிநபராக ஊர்வலமும் நடத்தியுள்ளார்.

 

ராஜிவ்காந்தி கொலை வழக்கில், கைதாகி சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் ஃபயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, 'முனைவர் ஜீவா' என்ற தனது முகநூல் பக்கத்தில் தமிழக மக்கள் விடுதலை இயக்க அரசியல் செயலாளர் முனைவர் ஆ.ஜீவானந்தம் 1,500 தினங்களாகத் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

இன்று டிசம்பர் 12 சனிக்கிழமை 1,500 வது நாள் நிறைவையொட்டி, பழைய பேராவூரணியில் இருந்து பேராவூரணி அண்ணா சிலை வரை தனிநபராக, சட்டையின் இருபுறமும் ராஜீவ் கொலை வழக்கில், கைதாகி சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற வாசகத்துடன் நடைப்பயணம் மேற்கொண்டார்.  

 

இது குறித்து முனைவர் ஆ.ஜீவானந்தம் கூறும் போது,

 

The 1500th day of the individual's online struggle to demand the release of 7 people

 

"30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருபவர்களை, விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் இதில் எவ்வித முடிவும் எடுக்காமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக தீர்மானம் நிலுவையில் உள்ளது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சனையில் காலதாமதமின்றி, முடிவு எடுத்து உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இணையவழியில் எனது முகநூல் பக்கத்தில் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டேன். இன்று 1,500-வது நாள் என்பதால் நடைப்பயணம் வந்தேன்'' என்றார்.

 

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி தனி நபர் காத்திருப்புப் போராட்டமும் நடத்தினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் அடிகளார்கள் போராட்டம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
struggle at Trichy Srirangam

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவில் ஆரியப்படாள் வாசல்  அருகே  கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இச்சிலை கடந்த 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர், அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.