/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z310_1.jpg)
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இன்று (28/11/2021) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிக கனமழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு 8,000 கன அடியிலிருந்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக உள்ளதையடுத்து உபரி நீர் திறப்பு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் திறப்பால் பூண்டி முதல் எண்ணூர் வரை உள்ள கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் ஆரணி ஆற்றில் நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஆந்திராவின் பிச்சாட்டூர் அணையிலிருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் உபரி நீர் வரத்து 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)