எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த பொழுது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.