Skip to main content

கீழே கிடந்த ஸ்பிரேவை அடித்ததால் 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

 

 12 students vomited and fainted after hitting the spray lying on the ground

 

சிதம்பரம் அருகே கவரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். செவ்வாய்க்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது அதே பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் சமத்துவராஜன் என்ற மாணவர் பள்ளிக்கு அருகே கீழே கிடந்த ஸ்பிரேவை எடுத்து சக மாணவர்கள் மீது அடித்துள்ளார்.

 

ஸ்பிரே அடித்த சில நிமிடங்களில் 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் முகத்தில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களை அனுமதித்தனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்கள் நல்ல முறையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

இதுகுறித்து அறிந்த சிதம்பரம் காவல்துறை ஏ.எஸ்.பி ரகுபதி மற்றும் அண்ணாமலை நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இந்த ஸ்பிரே காலாவதியான நிலையில் இருந்திருக்கலாம் என்றும், இதனால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !