/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20240530-WA0003.jpg)
ராணிப்பேட்டை மாவட்டம், ஆர் ஆர் சாலையில் சரஸ்வதி அம்மாள் என்ற மூதாட்டி நேற்று உயிரிழந்ததார். இதைத் தொடர்ந்து இன்று அவரது இறுதி நல்லடக்கம் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்த இறுதி நல்லடக்கநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர்களது உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்தனர்.
அப்போது ஒரு தரப்பினர் பூமாலை மற்றும் பட்டாசுகளை வெடித்தவாறு ஊர்வலமாக இறுதி அஞ்சலி செலுத்த வருகை தந்தனர். அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசில் இருந்து சிதறிய தீப்பொறி சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த மற்றொரு உறவினர்கள் வைத்திருந்த பட்டாசின் மீது விழுந்து வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 12 க்கும் மேற்பட்ட நபர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20240530-WA0004.jpg)
இதனைத்தொடர்ந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு தீக்காயம் அடைந்த நபர்களை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் வளர்மதி மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து தீக்காயம் அடைந்த நபர்களுக்கு ஆறுதல் தெரிவித்து மருத்துவர்களிடம் அவர்களுக்கு முழுமையான சிகிச்சை வழங்கும்படி அறிவுறுத்தினார். இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இறப்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் பட்டாசு வெடித்து சிதறியதில் படுகாயம் அடைந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)