10th class general exam has started

பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று பத்தாம் வகுப்புத்தேர்வுகள் தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

Advertisment

இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைக் கைதிகள் என 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தேர்வு 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளைத்தவிர்ப்பதற்காக மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisment

ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது நிரந்தரமாகத்தேர்வு எழுதத்தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பத்தாம் வகுப்புத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.