10th and 11th class general exam results will be released today

தமிழ்நாட்டில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. தமிழ்நாட்டில்2022-23 கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 9,22,725 மாணவமாணவிகள் தேர்வு எழுதினர்.

Advertisment

அதேபோல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி துவங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. இதில்7,73,787 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

Advertisment

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியாகிறது.

10மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை பதிவு செய்து தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.