Skip to main content

ரஜினி ரசிகரின் 10 ரூபாய் சாப்பாடு! ‘சித்தாள்’ திறந்துவைத்த ‘உழைப்பாளி’ உணவகம்!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

ரஜினியின் தீவிர ரசிகராக  10 ரூபாய் சாப்பாடு வழங்கும் உணவகத்தை ஆரம்பித்திருக்கிறார் ‘அம்மா’ உணவகம் தொடங்க ஆலோசகருமாக இருந்தவரும்  பிரபல சித்தமருத்துவருமான டாக்டர் வீரபாபு.

சென்னை மணப்பாக்கம் எம்.ஜி.சாலையில் உழைப்பாளிகளுக்காக மிகக்குறைந்த விலையில் தொடங்கப்பட்ட உணவகத்தை கட்டிடவேலை செய்யும் பெண்மணியை வைத்தே திறந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் டாக்டர் வீரபாபு. துணை ஆணையர் பிரபாகர், நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், ரஜினி ரசிகர் மன்றத்தினர் என பலரும் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டார்கள்.  

 

10 rupees worth food hotel; Rajini fan birthday celebration


டெங்கு காய்ச்சலுக்கு பலியாகிக்கொண்டிருந்த ஏழை எளிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச் சாறு கொடுத்து பல்வேறு உயிர்களை காப்பாற்றக் காரணமாக இருந்தவர் டாக்டர் வீரபாபு. அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட  பல்வேறு  நோய்களுக்கு சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பு அருகே  ‘வேரும் தழையும்’ என்கிற பெயரில் சித்த மருத்துவமனை ஆரம்பித்து தமிழ்மருத்துவத்தின்மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்திவருகிறார்.

 

10 rupees worth food hotel; Rajini fan birthday celebration


தற்போது, 2019 டிசம்பர்-12  ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவரும் சூழலில், ரஜினியின் தீவிர ரசிகரான டாக்டர் வீரபாபு, ஏழை எளிய மக்கள் சாப்பிடும் விதமாக சென்னை மணப்பாக்கம் எம்.ஜி.சாலையில் 10 ரூபாய் உணவகத்தை ஆரம்பிக்கிறார். இந்த உணவகத்திற்கு, ரஜினி நடித்த ‘உழைப்பாளி’ என்ற தலைப்பையே பெயராக சூட்டியிருக்கிறார்.

 

10 rupees worth food hotel; Rajini fan birthday celebration

 

70 ரூபாய்க்கு குறைந்து, உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு ஹோட்டல்கள் சென்னையில் இல்லை. கையேந்திபவனில்கூட 50 ரூபாய்க்கு குறைவாக சாப்பாடு விற்கப்படவில்லை. ஆனால், உணவகத்தின் வாடகை, மளிகைப்பொருட்கள் என பல்வேறு செலவுகள் உள்ளன. அப்படியிருக்க, 10 ரூபாய்க்கு எப்படி  சாப்பாடு போடமுடியும்? என்று நாம் கேட்டபோது, “ஏற்கனவே, சென்னை மாநகராட்சி வளாகத்துக்குள் கடந்த 7 வருடங்களுக்குமேலாக 15 ரூபாய்க்கு சாப்பாடு மற்றும் பல்வேறு பாரம்பர்யமிக்க ஆரோக்கியம் நிறைந்த பதார்த்தங்களை மிகவும் குறைந்தவிலைக்கு விற்பனை செய்துவந்தேன். இதனால், ஒருநாளைக்கு 1,000 பேர் பயன்பெற்றார்கள். இனி, அதைவிட அதிகமான ஏழை எளிய உழைப்பாளிகள், தொழிலாளிகள் பயன்பெறுவார்கள். நான், ரஜினியின் தீவிர ரசிகன். ஒரு சாதாரண ரசிகனாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்ய இருக்கிறேன். அதன், முதல்கட்டம்தான் உழைப்பாளி உணவகம்.

 

rajinikanth birthday


இதுகுறித்து, தலைவரின் உதவியாளர்களிடம் அனுமதி கேட்டபோது,  ‘ஏழைங்க வயிறார சாப்பிடுற நல்ல விஷயத்தைதானே செய்றீங்க. தாரளமா செய்ங்க’ என்று உற்சாகமூட்டினார்கள். தற்போது, தொடங்கியிருக்கிறேன். மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு 30 ரூபாயில் சாப்பாடும் வழங்கப்படுகிறது.

 

10 rupees worth food hotel; Rajini fan birthday celebration

 

இதுமட்டுமல்ல, திணை எள்ளுருண்டை, வாழை இலை கொழுக்கட்டை, கேழ்வரகு புட்டு, திணை அல்வா, சோளப்பணியாரம், வல்லாரை- முடக்கத்தான்- கம்பு-சோளம்- கேழ்வரகு தோசை இவையெல்லாம் 10 ரூபாய்தான். இதுபோக, தூதுவளை, வல்லாரை, முடவட்டுக்கால் போன்ற ஆரோக்கிய நிறைந்த மூலிகை சூப்கள் 10 ரூபாய் என விலை குறைவாகவும் ஆரோக்கியமான உணவமாகவும் இருக்கும்”என்கிறார் உற்சாகமாக.

 

10 rupees worth food hotel; Rajini fan birthday celebration

 

மணப்பக்கம் பகுதியில் மட்டுமல்ல, சுற்றியுள்ள அத்தனை ஏரியாக்களிலிருந்தும் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது உழைப்பாளி உணவகம். ரஜினி ரசிகர்போல மற்றவர்களும் இதை ஃபாலோ-அப் செய்யலேமே!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்; மேற்குவங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
benagaluru hotel incident at west bengal nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோரின் புகைப்படத்தையும், இவர்கள் இருவர் பற்றிய தொடர்புடைய முழு விபரங்களையும் என்.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது. அதில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. அதே சமயம் சந்தேகத்தின் பேரில் பாஜக பிரமுகர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். 

benagaluru hotel incident at west bengal nia

இது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 08029510900, 8904241100 என்ற தொலைபேசி எண்களுக்கோ தெரிவிக்கலாம் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.