Skip to main content

பழனி முருகன் கோயில் ஊழியர்கள் 10 பேர் பணியிடை நீக்கம்

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

10 employees of Palani Murugan temple have been dismissed

 

பழனி முருகன் கோயில் ஊழியர்கள் 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அதே சமயம் கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முடி எடுக்கும் ஊழியர்கள் இருவர் பணம் பெற்றதாகக் கூறி அவர்களை கோவில் இணை ஆணையர் லட்சுமி பணியிடை நீக்கம் செய்தார். இதனைக் கண்டித்து முடி எடுக்கும் ஊழியர்கள் கடந்த 3 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் இணை ஆணையர் லட்சுமியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

 

இந்நிலையில் பழனி முருகன் கோவில் முடி எடுக்கும் ஊழியர்கள் முன்னறிவிப்பு இன்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி 10 பேரை பணியிடை நீக்கம் செய்து கோவில் இணை ஆணையர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற 60 பேர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்மன் கழுத்திலிருந்த தாலியைப் பறித்துச் சென்ற நபர்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
theft inside temple near vellore

வேலூர் மாநகரம், கொசப்பேட்டையில் ஆனைகுலத்தம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது போல் மர்ம நபர் ஒருவர் நேற்று மாலை கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலை முன்பு அமர்ந்து சாமி கும்பிடுவதுபோல் இருந்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் சுவாமி சிலையின் கழுத்திலிருந்த தங்கத்தாலியைக் கழட்டி எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். 

பூஜைக்கு வந்த அய்யர் அம்மன் கழுத்தில் இருந்த தாலி காணாமல் போனதை தொடர்ந்து அதிர்ச்சியாகி இதுபற்றி கோவில் அலுவலர்களுக்கும், காவல்துறைக்கும் புகார் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒருவர் அம்மன் சிலை கழுத்திலிருந்த தாலியைத் திருடிச்செல்வது தெரிந்தது. இது தொடர்பான பரபரப்பு சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

theft inside temple near vellore

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டதை தொடர்ந்து திருடனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அம்மன் கழுத்திலிருந்த தாலிய யாரோ பறிச்சிட்டாங்க, இது அபசகுணம். இந்த செயலால் ஆண்களுக்கு ஆபத்து என யாரோ வதந்தியை பரப்பிவிட அப்பகுதி பெண்கள் பரபரப்பும், அச்சமும் அடைந்துள்ளனர். 

Next Story

திண்டுக்கல் மருத்துவரிடம் 51 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

51 lakh bribe to Dindigul doctor; The enforcement officer caught red-handed

 

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால் மூன்று கோடி ரூபாய்  லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

 

முதலில் இதற்கு சுரேஷ்பாபு தர மறுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து திவாரி தரப்பில் பேச்சுவார்த்தையில் நடைபெற்றது. இறுதியாக 51 லட்சம் ரூபாய் கண்டிப்பாக தரவேண்டும் என மிரட்டி உள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி திவாரி. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக மதுரை - நத்தம் சாலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாயை முதல் தவணையை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீதி உள்ள தொகையை கேட்டுள்ளார் அங்கித் திவாரி.

 

மீண்டும் மருத்துவர் சுரேஷ் பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சுரேஷ் பாபு புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் துணையோடு ரசாயனம் தடவியே 20 லட்சம் ரூபாயை பேக்கில் வைத்து இன்று காலை திண்டுக்கல் - மதுரை சாலையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு கொடுக்கும் பொழுது கையும் களவுமாக அமலாக்கத்துறை அதிகாரி திவாரி பிடிபட்டார். தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி சரவணன் தலைமையில் கடந்த 12 மணி நேரமாக திண்டுக்கல் இ.பி காலனியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து திவாரியிடம் விசாரணை நடைபெற்ற வருகிறது. அதேநேரம் மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.