
பிரபல காமெடி நடிகர் போண்டாமணி, சமீபத்தில் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதன் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்பு போண்டாமணிக்கு நடிகர்கள் விஜய்சேதுபதி, தனுஷ் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் பண உதவி செய்திருந்தனர். மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் மனோபாலா உள்ளிட்ட பலர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அவர் செயல்பட்டு வந்த அதிமுக கட்சி சார்பிலும் அவருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய நிதி உதவியை நாடி கோரிக்கை வைத்துள்ளார். தற்பொழுது சிகிச்சைக்கு பிறகு வீட்டில் இருக்கும் நடிகர் போண்டா மணியிடம் உதவி செய்வதுபோல் நடித்து 1 லட்சம் ரூபாயை சுருட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நடிகர் போண்டாமணிக்கு உதவி செய்வதைப்போல பழகிய ராஜேஷ் ப்ரித்தீவ் என்பவர் மருந்து வாங்கி வருவதாக போண்டாமணியிடம் கூறிவிட்டு அவரது மனைவியிடம் ஏடிஎம் கார்டை வாங்கி சென்றுள்ளார். ஆனால் அந்த நபர் மருந்தை வாங்காமல் 1 லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கியதால் சிக்கியுள்ளார். தற்பொழுது அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)