Skip to main content

“தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” - மத்திய அரசுக்கு முதலமைச்சர் காட்டமான பதில்! 

 

"You will be lost before you rock the cradle" - Chief Minister's response to the central government!

 

தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என்ற இந்தி வார்த்தையை அச்சிட வேண்டும் என்ற மத்திய அரசின் கடிதத்திற்கு தமிழக முதலமைச்சர் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

 

தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகத்தின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில், தயிருக்கான இந்தி வார்த்தையான ‘தஹி’ என அச்சிட வேண்டும் என மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. மேலும், தயிர் என்ற தமிழ் வார்த்தையையும், தயிருக்கான கன்னட வார்த்தையான ‘மோசரு’ போன்ற வார்த்தைகளை அடைப்புக்குறிக்குள் பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த கடிதத்திற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். 

 

இந்நிலையில் மத்திய அரசின் இந்த கடிதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! இந்தியை திணிப்பதை நிறுத்துங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !