Skip to main content

“தமிழ்நாட்டில் தேர்தல் இல்லாததால் இந்த ஆண்டு திருவள்ளுவரை மறந்துவிட்டீர்கள்” - கனிமொழி எம்.பி. பேச்சு

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

 'You have forgotten Thiruvalluvar this year because there is no election in Tamil Nadu'- Kanimozhi speech

 

கடந்த 31 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் அடுத்த நாள் (பிப்ரவரி 1 ஆம் தேதி) 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் அதானி குழும விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மூன்று நாட்களாக முடங்கின.

 

இதனைத் தொடர்ந்து நான்காவது நாளாக இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் மக்களவை கேள்வி நேரத்துடன் தொடங்கிய போது மீண்டும் எதிர்க்கட்சிகள் அதானி குழும விவகாரத்தை எழுப்பிய நிலையில் சபாநாயகர் மதியம் 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.  

 

அதன் பிறகு மீண்டும் கூடிய மக்களவையில் பேசிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ''நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக அங்கம் வகிப்பதில் பெருமை கொள்கிறோம். நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் உரையில் இந்த வருடம் திருவள்ளுவரை மறந்து விட்டீர்கள். காரணம் தமிழ்நாட்டில் எந்த தேர்தலும் இல்லை என்பதால். இருந்தாலும் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 

'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்' என்ற திருக்குறளை வாசித்தார். அப்பொழுது எதிர்த்தரப்பு உறுப்பினர் புரியவில்லை எனக் கருத்து தெரிவிக்க, ''நான் மொழியாக்கம் செய்கிறேன். நீங்கள் தென்னிந்திய மொழிகளை கற்றுக்கொள்ள முயற்சி செய்வதில்லை ஆனால், இந்தியை மட்டும் திணிக்க முயல்கிறார்கள். அதனால் தென்னிந்திய மொழிகளை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சிகள், மக்கள், பத்திரிகை உங்களிடம் சொல்ல நினைப்பதை நீங்கள் கேட்க நேரம் ஒதுக்க வேண்டும்'' என உரையை தொடர்ந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிமுக நிர்வாகி ஆலோசனைக் கூட்டம்; திமுக அரசைக் கண்டித்து தீர்மானம்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Resolution condemning DMK government in AIADMK executive meeting

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு அமைப்பு செயலாளர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.சி பரமசிவம், மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், அணி நிர்வாகிகள் பாலாஜி, ஞானசேகர், கலிலுல் ரகுமான், ஜோசப் ஜெரால்டு, வக்கீல் ராஜேந்திரன்,வெங்கட் பிரபு,ஜான் எட்வர்ட்,சகாபுதீன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ். பூபதி, சுரேஷ் குப்தா, ரோஜர், ராஜேந்திரன், ஏர்போர்ட் விஜி , எம்.ஆர்.ஆர்.முஸ்தபா உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 52க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் 24ஆம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திரளானோர் பங்கேற்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

Next Story

விஷச் சாராயம் குறித்து எதிர்க்கட்சிகளின் புகாருக்கு தி.மு.க எம்.எல்.ஏக்கள் மறுப்பு (படங்கள்)

Published on 22/06/2024 | Edited on 22/06/2024

 

தமிழ்நாடு சட்டசபை பேரவைக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று (22-06-24) கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு  தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 

அதே போல், முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பா.ம.க தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ மற்றும் சங்கராபுரம் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இரண்டு எம்.எல்.ஏக்களான ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் செய்தியாளர்களைச் சந்தித்து எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து பேசினர்.