Skip to main content

'நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கே தெரியும்' - நிர்வாகி பேச்சுக்கு எடப்பாடி பதில்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
 'We only know if you tell us'-Edappadi's response to the administration's speech

அதிமுகவில் பாஜகவின் இரண்டு சிட்டிங் எம்.எல்.ஏக்கள் இணைய இருப்பதாக அம்மன் அர்ஜுனன் என்ற அதிமுக எம்.எல்.ஏ தெரிவித்திருந்தார். இன்று 2.15 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் இருவர் அதிமுகவில் இணைய இருப்பதாக அவர் சொல்லியிருந்த நிலையில், அதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மறுத்துள்ளனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்பு அதிமுகவை நோக்கி மாற்றுக் கட்சியில் இருந்து பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள், அரசுப் பொறுப்பில் உள்ளவர்களும் அதிமுகவில் ஐக்கியமாகி வருகிறார்கள். நாங்கள் பாஜகவை போன்று யாரையும் வலை வீசி பிடிப்பதில்லை. நேற்று கூட பாஜக தலைவர் வியாபாரி போல கடை விரிச்சார். அந்த கடையில் வாங்குவதற்கு தான் ஆள் யாரும் வரவில்லை. அது போனியாகாத கடை. அதிமுகவை பொறுத்தவரை மக்களுக்கு தொண்டாற்றும் இயக்கம். எனவே பொதுவாகவே எல்லோருமே எங்களை நோக்கி வருவார்கள். நானும் உங்களை போல தான் செய்தி பார்த்தேன். பொறுத்திருந்து பாருங்கள்'' என்றார். அதேபோல் செய்தியாளர்களின் இதுகுறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி, 'நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. வந்தால் சந்தோஷம்' என பதில் அளித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவில் இணைந்த பிரியங்கா காந்தியின் ஆதரவாளர்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Supporter of Priyanka Gandhi who joined BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய ஆதரவாளர் தஜிந்தர் சிங் பிட்டு பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சில மணி நேரங்களிலேயே இவர் பாஜவில் இணைந்துள்ளார். ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயலாளராக பதவி வகித்து வந்த தஜிந்தர் சிங் நேற்று (20.04.2024) தனது ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அளித்தார். அதனைத் தொடர்ந்து ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தவுத்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்தது குறித்து தஜிந்தர் சிங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கடந்த 35 வருடங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். இன்று அக்கட்சியில் இருந்து விலகிவிட்டேன். யாருக்கு எதிராகவும் நான் பேச விரும்பவில்லை. மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக, நான் பாஜகவில் இணைந்துள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

பாஜக வேட்பாளர் மரணம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
BJP candidate Kunwar Sarvesh Kuma news

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குன்வர் சர்வேஸ் குமார் (வயது 72) உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். சமீபத்தில் இவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பான பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மொராதாபாத் தொகுதிக்கு முதல் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. குன்வர் சர்வேஸ் உள்ளிட்ட 12 பேர் மொராதாபாத் தொகுதியில் வேட்பாளர்களாக களம் கண்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குன்வர் சர்வேஸ் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019 வரை மொராதாபாத் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார். ஐந்து முறை எம்எல்ஏவாகவும் இவர் இருந்துள்ளார்.  இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். குன்வர் சர்வேஸ் குமார் மறைவுக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.