Withdrawal of Rs.2000; Finance Minister Goldam Thanaras comments

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisment

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மேலும் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பாஜக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் அக்டோபர் முதல் 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என்றஅறிவிப்புபெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களைத்தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது அவரிடம் 2000 ரூபாய் நோட்டு குறித்தும் மத்திய அரசின் முடிவு குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர், “தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு என்பது இத்தகைய முடிவுகளை அரசு எடுக்கும் போது சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளை முன்னதாகவே கேட்க வேண்டும். இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ரிசர்வ் வங்கி கலந்தாலோசித்து இருக்க வேண்டும். வருங்காலங்களிலாவது இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது கலந்தாலோசிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.