Skip to main content

“நாங்கள் சொன்னது இன்றைக்கு உண்மையாகி வருகிறது” - திருமா பேட்டி

Published on 15/01/2023 | Edited on 16/01/2023

 

"What we said is coming true today" - thiruma Interview

 

ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்த போதே அவரை இங்கே நியமிக்க வேண்டாம் அரசியல் குழப்பங்களை உருவாக்குவார் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அப்போதே சுட்டிக் காட்டினோம் என விசிக தலைவர் திருமா தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''தமிழகம் வேறு தமிழ்நாடு வேறு என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதே ஒரு குதர்க்கவாதம். இரண்டும் ஒன்றுதான். ஆனாலும் இரண்டுக்கும் இடையிலேயே இடைவெளியை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒரு உரையாடலை ஆளுநர் தொடங்கி வைத்திருக்கிறார். அது வெறும் சொல் விளையாட்டு அல்ல, கருத்தியல் தொடர்பான முரண் என்பதை நாம் உணர்கிறோம். ஆகவே தான் அவருடைய போக்குகள் தமிழ் இனத்திற்கு விரோதமாக இருக்கிறது. குறிப்பாக திராவிட கருத்தியலுக்கு எதிராக இருக்கிறது. சமூக நீதி அரசியலுக்கு எதிராக இருக்கிறது என்று அவ்வப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக் காட்டி வந்திருக்கிறது.

 

அவரை ஆளுநராக நியமித்த போதே அவரை இங்கே நியமிக்க வேண்டாம் அரசியல் குழப்பங்களை உருவாக்குவார்; பதற்றத்தை ஏற்படுத்துவார்; நாகலாந்தில் அதற்கான சான்றுகள் இருக்கிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அப்போதே சுட்டிக் காட்டி எதிர்ப்பு தெரிவித்தோம். இன்றைக்கு அது உண்மையாகி வருகிறது. ஆளுநர் உண்மையாக்கி கொண்டு இருக்கிறார். சட்டப்பேரவையில் அவர் நடந்து கொண்ட போக்கு என்பது தனிப்பட்ட முறையில் அவருடைய நடவடிக்கையாக நாம் பார்க்கவில்லை. தனிநபர் நடத்தையோடு தொடர்புடையது என்று விடுதலைச் சிறுத்தை கட்சி பார்க்கவில்லை. அவர் உள்வாங்கி இருக்கக்கூடிய அரசோடு தொடர்புடையது. அவர் உள்வாங்கி இருக்கிற கருத்துகளோடு தொடர்புடையது. அவர் இங்கு நிலைநாட்ட விரும்புகிற சனாதன அரசியலோடு தொடர்புடையது. ஆகவேதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு நாட்களுக்கு முன்பு 'ஆளுநரே திரும்ப போ...' என்ற முழக்கத்தை முன்வைத்து மாபெரும் முற்றுகை அறப்போராட்டத்தை நடத்தினோம்'' என்றார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வழக்கு - ஒப்புதல் தர ஆளுநர் மறுப்பு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Former Minister K.C. Case against Veeramani' - Governor's refusal to approve

 

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கும், அரசால் அனுப்பப்பட்ட கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை முன் விடுதலை செய்யும் விவகாரத்தில் 71 பேரில் 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 39 பேர் மீது பரிசீலனையில் உள்ளது. ஒருவரை விடுதலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளையும் ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார். அதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கோப்புகளை அனுப்பி இருந்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்ய ஆவணங்கள் குறைவாக உள்ளதாகக் கூறி ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“ஆளுநர் தீர்வு காணாவிட்டால் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” - தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

If the governor does not find a solution, he will have to issue an order SCin the case pursued by the TNgovt

 

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இரண்டாவது முறையாக 10 மசோதாக்களை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கடந்த 28 ஆம் தேதி ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். பஞ்சாப் ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஒரு மசோதா ஆளுநர் மூலமாகத் திரும்ப அனுப்பப்பட்டால், அந்த மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதன் பின்னால்தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். இங்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்” என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில், “இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், ஆளுநரின் அதிகாரத்தின்படி மசோதாவை நிறுத்தி வைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம் என்ற அதிகாரம் உள்ளது. அந்த வகையிலேயே இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. மசோதாக்கள் மீதான ஒப்புதல் வித் கெல்ட் (withheld) என முடிவு செய்யப்பட்ட பிறகு மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி இருக்கலாம். ஆனால் சட்டப்பேரவைக்கும் அனுப்பவில்லை.

 

If the governor does not find a solution, he will have to issue an order SCin the case pursued by the TNgovt

 

குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால் ஆளுநர் மத்திய அரசின் நாமினி (nominee) என்பதை ஆளுநர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க வைக்கவோ, முடக்கி வைக்கவோ (Kill the Bill) அதிகாரம் இல்லை. மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் ஆளுநர் முதலிலேயே அனுப்பி இருக்க வேண்டும். மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. ஆளுநர் ஆர்.என். ரவி தரப்பில் குழப்பம் உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு (11.12.2023) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்