Skip to main content

கையெழுத்துக்கு ஏது மொழி..? தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

 

தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற எம்பிக்கள் செயற்கையான தமிழ் பற்றை வெளிப்படுத்தி உள்ளார்கள். தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு பலர் ஆங்கிலத்தில் கையெழுத்துப் போட்டு உள்ளார்கள். இயல்பாக அவரவர் தாய்மொழியில் உறுதிமொழி எடுப்பது பாராட்டுக்குறியது. இவர்கள் படித்தது ஆங்கிலம், பள்ளி எது என்பதையெல்லாம் பார்த்தோம் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட போலி தமிழ் பற்றை முன்னிறுத்துக்கொண்டிருக்கிறார்கள் என தெரியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.


  Tamilisai Soundararajan ks azhagiriஇதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழிசைக்கு எது முரண், எது முரணில்லை என்பது தெரியாது. நான் அப்படி சொல்வதால் அவர் வருத்தமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒரு கையெழுத்து என்பது ஒருவர் போட்டு பழகிவிட்ட பிறகு பல ஆவணங்களில் அது இருக்கிறது. அதன் பிறகு அந்த கையெழுத்தை மாற்றக்கூடாது. மாற்றினீர்கள் என்றால் எந்த ஆவணமும் செல்லாமல் ஆகிவிடும். எனவே அவர்கள் படிக்கிற காலத்தில் அப்படி கையெழுத்து போட்டியிருப்பார்கள். அது எந்த மொழி என்று கூட சொல்ல முடியாது. கையெழுத்துக்கு ஏது மொழி. அதில் தமிழ் வார்த்தையையோ, ஆங்கில வார்த்தையையோ கண்டு பிடிக்க முடியாது. சில கோடுகளைத்தான் கண்டுபிடிக்க முடியும். கையெழுத்துக்கு மொழி கிடையாது என்றார். 


 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அவர் தமிழக நலனையே புறக்கணிக்கிறார்'- தமிழிசை கருத்து

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
'He is neglecting the welfare of Tamil Nadu' - Tamilisai opinion

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில் பல கோரிக்கைகளை எடுத்து வைத்திருந்தேன். நிதிநிலை அறிக்கையில் இதுவெல்லாம் இடம்பெற வேண்டும்; இதையெல்லாம் எதிர்பார்க்கிறோம் என்று கோரிக்கைகளை வைத்திருந்தேன். மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்க கூடிய சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும்; கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவித்திருக்கக்கூடிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; தாம்பரம் செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலை திட்டத்திற்கான ஒப்புதல் வழங்க வேண்டும் இப்படி சில கோரிக்கைகளை நான் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் எதையுமே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

'He is neglecting the welfare of Tamil Nadu' - Tamilisai opinion

மைனாரிட்டி பாஜகவை மெஜாரிட்டி பாஜகவாக்கிய ஒரு சில மாநில கட்சிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் சில திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். அறிவித்திருக்கிறார்களே தவிர அதையும் நிறைவேற்றுவார்களா என்பது சந்தேகம்தான் என்னைப்  பொறுத்தவரை. எப்படி தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரயில் திட்டம் என்று அறிவித்துவிட்டு நிதி ஒதுக்காமல் இன்றுவரை ஏமாற்றி வருகிறார்களோ அதேபோல அந்த மாநிலங்களுக்கும் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தமிழகத்தை மத்திய அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருப்பதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் பங்கேற்க வேண்டாம் என முடிவெடுத்து இருக்கிறேன். அதை நான் புறக்கணிக்க போகிறேன். நாளை திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவார்கள்'' என்றார்.

nn

இந்நிலையில் தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதை தமிழிசை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் முதல்வர் தமிழக மக்களின் நலனை புறக்கணிக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் புறக்கணிப்பது என்பது மக்கள் நலனையே ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் செயலாகும்.நேரில் சந்தித்து விவாதித்து தேவையானதை தமிழக முதல்வர் பெற வேண்டும்' என தெரிவித்துள்ளார். அதேபோல் 2024 மத்திய பட்ஜெட் குறித்து சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் 'ஆந்திரா பீகாருக்கு பட்ஜெட்; மற்ற மாநிலங்களுக்கு அல்வா' என விமர்சித்துள்ளார்.

Next Story

“சிபிஐ விசாரணை நிச்சயம் தேவை” - தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Tamilisai insists CBI investigation is definitely needed 

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்ததினர்.

அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங்க் உடலுக்கு தெலுங்கானாவின் முன்னாள் ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இந்த கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் யாரும் உண்மையான குற்றவாளிகள் கிடையாது என்று நான் சொல்லவில்லை எனக்கும் முன்னால் பேசிய ஏழைத்தாய் ஒருவர் சொல்லி விட்டு செல்கிறார். ஆகவே இது மிகவும் தீவிரம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நிச்சயம் தேவை. ஏனென்றால் திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இறுதி சொற்பொழிவைப் பார்த்தீர்கள் என்றால் ஆளுங்கட்சியின்  முதலமைச்சரையும், முதல்வரின் மகனையும் சாடியிருக்கிறார். நம்மை வந்து அந்த கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிடுகிறார்கள். அதில் நாம் சேர மாட்டோம் என்று சொல்கிறார். இந்த கொலை வழக்கில் அரசியல் பின்புலம் இல்லை என ஏன் அதிகாரிகள் இப்போதே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  வடசென்னை முதலமைச்சர் தொகுதிக்கு உட்பட்ட பகுதி. வடசென்னை பல அராஜகத்திற்கும் பல குற்றங்களுக்கும் புகலிடமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏழைகளுக்குப் புகழிடம் கொடுத்தவர்கள் கொலை செய்யப்படுகிறார். ஆகவே உடனடியாக இது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும். இந்த கொலை வழக்கில் உடனடியாக ஆஜரானது குறித்து ஒப்புக்கொள்ள முடியாது. இது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். நியாயம் கிடைக்க வேண்டும். தமிழகத்தில் இதுவே அரசியல் கொலைகளில் கடைசியாக இருக்க வேண்டும் என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பேசினார்.