Published on 30/11/2022 | Edited on 30/11/2022

மதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் ஏற்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “சிலருக்காக சிலர் கருத்தை மாற்றி சொல்லி இருக்கலாம். ஆனால் அதிமுகவை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த இயக்கத்தில் இருக்கும் தொண்டர்கள் எல்லாம் அண்ணன், தம்பிகளாக உழைத்துக் கொண்டுள்ளார்கள். அந்த இயக்கம் மாபெரும் இயக்கம் என மாற்று முகாமில் இருப்பவர் சொல்லுகிறார் என்றால் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அதே நேரத்தில் கூட்டணி கட்சியினர் நம்மை இழிவாக பேசுவது மனவருத்தமாக இருக்கிறது. நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன். நாங்கள் பனங்காட்டு நரிகள். எதற்கும் அஞ்சமாட்டோம்” எனக் கூறியுள்ளார்.