The video is shocking; Blacklist-BJP Annamalai

அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் சிறார்கள் தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதன் காரணமாக அங்கு பணியில் அமர்த்தப்பட்டதாகக் கூறப்பட்ட சிறார்கள் தங்களுக்கு ஊதியம் தரவில்லை என நேற்று முன்தினம் ஆவின் வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஒன்றரை மாதங்களாக அங்கு பணியாற்றி வந்த சிறார்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி சிறார்கள் உட்பட ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆவின் நிறுவனத்தில் சிறார்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் சிறார்கள் பணியமர்த்தப்பட்டதாகத் தகவல் வெளியானது போலியானது. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

The video is shocking; Blacklist-BJP Annamalai

Advertisment

இந்நிலையில் ஆவினில் சிறார்களை பணியில் அமர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆவினில் சிறார்கள் வேலை செய்த காணொளி ஆதாரங்கள் அதிர்ச்சி அளிக்கிறது. சிறார்களை பணியில் அமர்த்திய ஒப்பந்ததாரரின் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும்’என தெரிவித்துள்ளார்.