Skip to main content

கமிஷன் கொடுக்கலன்னு துணைவேந்தரை மாட்டி விட்டது அமைச்சர் வேலுமணி: தினகரன் பதிலடி!

Published on 14/02/2018 | Edited on 14/02/2018
thinakaran


பேக்கேஜ் முறையில் மக்கள் கூட்டத்தை கூட்டி, டிடிவி தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அமைச்சர் வேலுமணி விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள டிடிவி தினகரன், ஆட்சி காணாமல் போய்விடும் என்ற பயத்தில் அமைச்சர் வேலுமணி பேசுவதாக பதிலடி கொடுத்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 8 நாட்களாக சட்டமன்ற தொகுதி வாரியாக அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்தவகையில், நேற்று தஞ்சை மாவட்டத்தில் கடைசி நாள் சுற்றுப்பயணமாக பேராவூரணி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். அ.தி.மு.க வினருக்கே உரிய முறைப்பாரி வரவேற்பு, கிராமத்துப் பெண்களை குட்டி யானையில் அழைத்து வருவதும் இருந்தது.

தினகரன் வருகைக்கு 2 மணி நேரம் முன்பு மேடையில் குத்தாட்டம் போட்டு கூட்டத்தை நிறுத்தி வைத்தனர். திருச்சிற்றம்பலத்திற்கு மாலை 5.30 மணிக்கு வருவதாக கூட்டத்தை கூட்டியதால் பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை - பேராவூரணி சாலை போக்குவரத்து நெரிசலால் முடங்கியது. இதனால் நேற்று சிவராத்திரிக்காக கீரமங்கலம், நெடுங்குடி சிவன் கோயிலுக்கு செல்ல வந்த பக்தர்கள் பரிதவித்தனர். இரவு 8.45 மணிக்கு பிறகு வந்த தினகரன் பேசும் போது..

இன்று அமைச்சர் வேலுமணி சொல்லி இருக்கிறார், தினகரனுக்கு கூட்டம் கூடுவது பேக்கேஸ் கொடுத்து கூட்டி வரும் கூட்டம் என்று. அவர்கள் தான் அம்மாவை ஏமாற்றி ஒவ்வொரு வேலைக்கும் கமிஷன் வாங்கி அதில் கூட்டம் கூட்டி வருகிறார்கள் என்பதை மறந்து விட்டார்.

நாங்கள் பணம் கொடுக்கவில்லை ஆனால் வாகன ஏற்பாடு செய்து கொடுத்திருப்பார்கள். ஆட்சி காணாமல் போய்விடும் என்ற பயத்தில் அமைச்சர் வேலுமணி பேசுகிறார். அதிலும் இந்த வேலுமணி வேலைகளை கட்சிக்காரர்களுக்கு கூட கொடுக்காமல் தனது பினாமி நிறுவனப் பெயரில் வேலை செய்கிறார். இன்னும் 6 மாதத்தில் ஆட்சி முடிவுக்கு வரும் அப்போது அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் வெளியே வரும்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி வேலுமணிக்கு சரியாக கமிஷன் கொடுக்கவில்லை என்பதால் தான் அவரை மாட்டிவிட்டார். இது கூவத்தூர் பழனிச்சாமிக்கும் தெரியும். வேலுமணி, வைத்திலிங்கம் எல்லோரும் விவசாயம் செஞ்சா சம்பாதிச்சாங்க? எங்களிடம் ஆட்சி, சின்னம் இல்லை ஆனால் கூட்டம் நம்ம பக்கம் இருக்கிறது.

ஆர்.கே.நகரில் திமுக இன்னும் கொஞ்சம் வேலை செய்திருந்தால் அ.தி.முக டெபாசிட் கூட வாங்கி இருக்காது. டெல்டா மாவட்டத்தை பாதுகாக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதுடன் சட்டமாக கொண்டு வந்து பாதுகாப்போம். ஏரி, குளம் பாதுகாக்கப்பட்டு விவசாயம் பழையபடி பாதுகாக்கப்படும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல மண்ணுக்கு அடியில் வைரமே இருந்தாலும் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.

- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக ஒப்பந்தக்காரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Anti-corruption department probes ADMK contractor's house

 

மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எல்லாமுமாக இருந்து அரசு ஒப்பந்தங்கள் அதிகமாக எடுத்து கோடிக் கணக்கில் முறைகேடுகளில் ஈடுபட்டவர் புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல். புதுக்கோட்டை உள்பட பல ஊர்களில் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பழனிவேல் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து கடந்த  ஆண்டு சோதனை செய்தது.

 

அதனைத் தொடர்ந்து தற்போது தர்மபுரி முன்னாள் மாவட்ட ஆட்சியர் வீட்டிலும் அங்கு கொரோனா காலகட்டத்தில் பிளிச்சிங் பவுடர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அதன் ஒப்பந்தக்காரரான கடுக்காக்காடு பழனிவேல் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

Anti-corruption department probes ADMK contractor's house

 

இதனைத் தொடர்ந்து அவரது சகோதரரும் பாஜக பிரமுகருமானவர் வீட்டிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தயாராகி வருகின்றனர்.

 


 

Next Story

'இதில் தலையிட எவ்வித காரணமும் இல்லை' - வேலுமணிக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

'There is no reason to interfere in this'- the court gave Velumani Shock

 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

 

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஏற்கனவே டெண்டர் முறைகேடு வழக்கில் முகாந்திரம் இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றத்தில் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் ராமன் அமர்வு, மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எஸ்.பி.வேலுமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது.

 

அதேநேரம் தன் மீதான சொத்துகுவிப்பு வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என்ற வேலுமணியின் மனுவை விசாரித்த நீதிபதிகள், வேலுமணிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது. தேர்தல்களின் போது வேலுமணி கொடுத்த சொத்து கணக்குகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களுக்கு அவரிடம் விளக்கம் கேட்ட பிறகு வழக்குப்பதிவு செய்ய முடியும் என்கின்ற வாதத்தை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் இந்த வழக்கில் தலையிட எவ்வித காரணமும் இல்லை என வேலுமணியின் மீதான சொத்துகுவிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.