Advertisment

தமிழ்நாடு முழுக்க வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அதன் காரணமாக கட்சிச் சார்ந்த வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை, 107வது வார்டு ஆஷாத் நகரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் அண்ணா நகர் சட்டமன்றத் உறுப்பினர் மோகன் ஆகியோர் விசிக வேட்பாளர் கிரண் ஷர்மிலிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.