Skip to main content

ஜெயலலிதா ஆட்சியில் மிகப்பெரிய மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர் வைகோ

Published on 02/12/2022 | Edited on 03/12/2022

 

Vaiko was involved in the anti-liquor movement during the Jayalalithaa regime

 

கோவையை திமுக அரசு புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டியும் பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஏற்பாட்டில் கோவை சிவானந்தா காலணியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

 

தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டார். அதன்படி இன்று கோவை சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேடையில் பேசுகையில், ''கோவையில் மிகப் பிரமாண்டமான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு கைவிட்டு வருகிறது. 

 

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்தாவது திமுக அரசு தூக்கத்திலிருந்து எழுந்து மக்களுக்கு நன்மையாற்ற வேண்டும். பத்தாண்டு அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி. அந்த ஆட்சியில்தான் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து நாட்டு மக்களுக்குக் கொடுத்தார்கள். அவரின் மறைவுக்குப் பிறகு அவரது வழியில் என்னுடைய தலைமையில் சிறப்பான ஆட்சியை மக்களுக்குத் தந்தோம். அதிமுகவை குறைசொல்ல ஒரு தகுதி வேண்டும்'' என்றார்.

 

இந்நிலையில் அதிமுக கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எஸ்.பி.வேலுமணிக்கு பழச்சாறு கொடுத்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை முடித்து வைத்தார். இதில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. வேலுமணி “கோவை மாவட்டத்தில் ஒட்டு மொத்த மக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த உண்ணாவிரதத்தில் எங்கள் கோரிக்கையானது, பழுதடைந்த அத்தனை சாலைகளையும் சீரமைக்க வேண்டும். மழையில் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். மக்களின் கோரிக்கைகளை முதல்வர் புறக்கணிக்காமல் அத்தனை திட்டங்களையும் வேகமாகச் சரி செய்ய வேண்டும்.

 

11 சட்டமன்றத் தொகுதிகளிலும் சாலைகளை மேம்படுத்த வேண்டும். அதேபோல் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றைத் திரும்பப் பெற வேண்டும். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் மிகப்பெரிய எழுச்சியுடன் பங்கு கொண்டனர். 

 

திமுக கூட்டணிக் கட்சிகள் அதிமுக ஆட்சியில் சிறு விஷயங்களுக்குக் கூட போராட்டம் நடத்துவார்கள். ஜெயலலிதா ஆட்சியில் வைகோ மிகப்பெரிய அளவில் மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் இன்று அனைவரும் திமுகவின் சொற்படிதான் கேட்கின்றனர்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அண்ணாமலையின் மைத்துனரும் எஸ்.பி.வேலுமணியும் பார்ட்னர்கள்...” - அம்பலப்படுத்தும் மூத்த பத்திரிகையாளர்

Published on 06/08/2023 | Edited on 06/08/2023

 

Annamalai cousin Mathura and Velumani are partners says journalist Pandian

 

அண்ணாமலையின் பாதயாத்திரை மற்றும் தற்கால அரசியல் குறித்து தன்னுடைய கருத்துகளை மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்....

 

“அண்ணாமலையின் அரசியல் கர்நாடகத் தேர்தலுக்குப் பிறகு பாதாளத்துக்கு சென்றுவிட்டது. சி.டி. ரவியை தூக்கிவிட்டார்கள். கர்நாடக ஃபார்முலாவில் பாஜக பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது. அங்கு மீண்டும் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மிகப்பெரிய தோல்வியைக் கண்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பிம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த தேர்தல் கர்நாடக சட்டமன்ற தேர்தல். தமிழ்நாட்டில் பாதயாத்திரை மூலம் தங்களுக்கான வாக்கு வங்கியை உருவாக்க முடியும் என்று இவர்கள் நினைக்கின்றனர்.

 

அண்ணாமலை தொண்டர்களோடு ஒருவராக இருப்பதில்லை. கன்ஷிராம், மாயாவதி போன்றவர்கள் தலித் அரசியலுக்காகப் பயன்படுத்திய வேனை இவர்கள் தங்களுடைய கட்சிக்காக பயன்படுத்துகின்றனர். அண்ணாமலையை ஆர்எஸ்எஸ் தான் கட்டுப்படுத்துகிறது. அவர்களோடு இவர் நேரடி தொடர்பில் இருக்கிறார். அதனால்தான் இவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அண்ணாமலையின் பெயரைச் சொல்லி அவருடைய மைத்துனர் வசூல் வேட்டை நடத்துகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலைக்கு பணம் கொடுக்கின்றனர். அண்ணாமலையின் மைத்துனருடன் முன்னாள் அமைச்சர் வேலுமணி பார்ட்னராக இருக்கிறார். அண்ணாமலையின் பயணத்துக்கு வேலுமணி, தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் பணம் கொடுத்துள்ளனர். இதனால்தான் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார். 

 

அதிமுகவும் பாஜகவும் கட்சிகள் என்கிற அடிப்படையில் வேறுவேறாக இருந்தாலும், இருவரும் ஒன்றுதான். ஒருவருடைய கொள்கையை இன்னொருவர் எப்போதோ ஏற்றுக்கொண்டு விட்டனர்.  ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை சென்ற பிறகுதான் பாஜக கதற ஆரம்பித்தது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்ததே அந்த யாத்திரைதான். அண்ணாமலை செல்வது வீட்டிலிருக்கும்போது நாம் செல்லும் வாக்கிங் போன்றதுதான். உலகிலேயே மாலை 4 மணிக்கு ஆரம்பித்து 6 மணிக்கு முடிக்கிற ஒரே பாதயாத்திரை அண்ணாமலையுடைய பாதயாத்திரைதான். இவர் வைத்திருக்கும் புகார் பெட்டியில் புகார் கொடுக்கும் மக்களுடைய குறையை எவ்வாறு தீர்க்கப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது. முதலமைச்சர் சொல்வது போல் இது ஒரு பாவ யாத்திரை தான்” என்றார்.

 

 

 

Next Story

''அதுதான் எல்லாருக்கும் தெரியுமே''-எஸ்.பி.வேலுமணி பேட்டி 

Published on 14/04/2023 | Edited on 14/04/2023

 

'Everyone knows that'-S.B. Velumani Interview with

 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தனது ட்விட்டர் பதிவில் ‘திமுகவின் ஃபைல்கள்’ எனக் குறிப்பிட்டு ‘ஏப்ரல் 14, 2023 - காலை 10:15’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவர் பதிவிட்ட காணொளியில் திமுகவின் முக்கிய தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் ரசீதை வெளியிட்டார். தொடர்ந்து திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினார். அந்த வீடியோவில் திமுகவை சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்துமதிப்புகள் குறித்து காட்சிகள் இருந்தன.

 

இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ''எங்கே பார்த்தாலும் ஊழல்தான் மக்களுக்கே தெரியும். அதிமுகவாக இருந்தாலும் சரி, அண்ணாமலையாக இருந்தாலும் சரி நாங்கள் எல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை. கோயம்புத்தூரில் சாதாரணமாக ஒரு லோடு மண் எடுக்க முடியாது. மண் எடுப்பதற்கு 3000,  4000,  5000 லஞ்சமாக வாங்குகிறார்கள், மாநகராட்சி ஆபீஸ், தாலுகா ஆபிஸ் என எங்கே போனாலும் சான்றிதழ்கள் வாங்குவதற்கு லஞ்சம். கடுமையாக ஊழல் எல்லா பக்கமும் பரவி இருக்கிறது. இது அனைத்து மக்களுக்கும் தெரியும். அவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள் திமுக காரர்கள். கண்டிப்பாக இதற்கெல்லாம் முடிவு வரும். கரோனா காலத்தில் நாங்க வாரம் வாரம் மருந்து அடிச்சோம், மீட்டிங் போட்டோம். ஆனால் இப்பொழுது எந்த ஆய்வு கூட்டமும் இல்லை. சமீபத்தில் ஒரு பெண் கூட கோயம்புத்தூரில் இறந்து விட்டார் கரோனாவால். எதிர்க்கட்சித் தலைவர் மக்களுக்காக பல்வேறு கேள்விகளை சட்டமன்றத்தில் வைக்கிறார். அதையெல்லாம் வெளியவே தெரியவிடாமல் செய்து விடுகிறார்கள்'' என்றார்.