Skip to main content

கஜா புயலில் 89 தமிழர்கள் உயிரிழந்தார்களே அனுதாப வார்த்தைகளாவது சொன்னீர்களா - வைகோ

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர்  ராமலிங்கத்தை ஆதரித்து ம.தி.மு.க.வின் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. 

 

vaiko

 

கூட்டத்தில் கும்பகோணம் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட திமுக, மதிமுக மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அங்கு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து வைகோ பேசினார்.
 

"நாட்டிற்கு பேராபத்து  வந்திருக்கும் சூழலில் பாராளுமன்ற தேர்தலை நாம் சந்தித்துவருகிறோம். ஆபத்து வெளியிடங்களில் இருந்து வரவில்லை, வெளிநாடுகளில் இருந்து வரவில்லை, இந்துத்துவா அமைப்புகளின் சார்பில் அவர்களது கோரகுரலாக நாட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் வந்திருக்கிறது. 
 

 பிரதமர் மோடி இந்துத்துவா சக்திகளை விமர்சனம் செய்வதை அப்படியே திரித்து மாற்றி இந்துக்களை எதிர்க்கிறார்கள் என்று  மாற்றி சொல்லி தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்.
 

 இந்துத்துவா வன்முறையில் ஈடுபட்டதுண்டா என்று கேட்கிறீர்களே மறந்துவிட்டீர்களா கோட்சேவால் காந்தியைக் சுட்டுக் கொண்றீர்களே மறந்துவிட முடியுமா?  இரண்டு மாதங்களுக்கு முன்பு அலிகரில் காந்தியின் பொம்மையில்  துப்பாக்கியால் சுட்டு ரத்தம் கசிவது போல்  காட்சியமைத்தீர்களே மறந்துவிடமுடியுமா? அந்த கொலைகார கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலைவைப்போம் என்று  இந்துத்துவா சக்திகள் சொல்வது நெஞ்சை பதற வைக்கிறது. 

 

இதற்கெல்லாம் சாதாரன கண்டனம்கூட தெரிவிக்காத  பிரதமர் மோடி, பிரதமர் நாற்காலியில் அமர்ந்து இருக்கும் தகுதியை அடியோடு இழந்துவிட்டார்.
 

மேகதாதுவில் அணை கட்டினால் மேட்டூர் முதல் கல்லணை வரை எங்கும் தண்ணீர் வராது, இதனால் தமிழகமே பட்டினி பிரதேசமாக மாறிவிடும். 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்து பாலைவனமாக மாறும், பூமிக்கு அடியில் இருக்கும் இயற்கை எரிவாயுக்களை எடுத்து பல்லாயிரக்கணக்கான கோடிகளை அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமானம் ஈட்டக்கூடிய திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது.
 

மோடி அவர்களே, கஜா புயலில் 89 தமிழர்கள் உயிரிழந்தார்கள் அனுதாப வார்த்தைகள் சொன்னீர்களா,  உலக நாடுகளுக்கெல்லாம் சென்று வந்த பிரதமர் ஒப்புக்காவது வந்து பார்த்தீர்களா, விவசாய கடன், கல்விக் கடனை தள்ளுபடி செய்ய மாட்டீர்கள். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ 5 லட்சம் கோடி வரிச்சலுகை, ரூ 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி  விஜய் மல்லையா ரூ 9 ஆயிரம் கோடி, நீரவ் மோடி ரூ 13 ஆயிரத்து 500 கோடி ஊழல் செய்து தப்பி செல்ல வழி வகுத்திருக்கிறீர்களே.
 

விக்ரம் கோத்தாரி  ரூ 3850 கோடி மோசடி செய்து ஓடிப்போனார், ஆந்திராவில் நிக்கில் சுரேஷா மூன்று வங்கிகளில் ரூ 2500 கோடி மோசடி செய்து வெளியேறினார். இதற்க்கு எல்லாம் காரணம் கார்ப்ரேட் முதலாளிகளின் ஆதரவாளரான பிரதமர் மோடிதானே காரணம்.

 


நரேந்திர மோடி, அமித்ஷா பெயரை சொன்னாலே தமிழக  அரசு நடுங்கி ஒடுங்கி விடுகிறது. இதற்கு காரணம் பருப்பு,  ஆம்னி பஸ் ஊழல், கல்வித் துறை, பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத் துறைகளில் ஊழல், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல், அனைத்து துறைகளிலும் ஊழல் செய்த அமைச்சர்கள் வீடுகளில் வருமானவரித்துறை மூலம் ரெய்டு நடைபெற்றது, நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகும் இதற்கு என்ன பதில் என்று இதுவரை கூற முடியவில்லை.
 

தமிழகத்தில் 80 லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கிறார்கள் தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக வந்த போர்டு நிறுவனத்திடம் அதிமுக அரசு கமிஷன் அதிகம் கேட்டதால் குஜராத்துக்கும், வேறுமாநிலத்திற்கும் சென்றுவிட்டனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் சித்தூருக்கு சென்றுவிட்டது.

 

கியா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ  7 ஆயிரத்து 950 கோடி முதலீட்டில் தொடங்க வந்த நிறுவனம் இவர்கள் கேட்ட கமிஷன் தொகையால்  அவர்கள் போட்ட முதலீட்டுத் தொகையை விட பெருந்தொகை என கூறி அனந்தபூர் சென்றுவிட்டது.  
 


தமிழகத்தில் நடைபெற்ற  ஓசூர் தர்மபுரி ஆகிய பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தி உயிர் இழப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சியில் ஆளும் கட்சி பிரமுகரின் பிள்ளைகள் நடத்திய பாலியல் வன்முறையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மூடி மறைத்ததால் 200 பெண்களின் வாழ்க்கை சிதைக்கப்பட்டுள்ளது.  

 

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில்  அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளார்கள், இது தமிழக அரசு  காவல்துறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கூலிப்படையினர் போல்  திட்டமிட்ட படுகொலை.  

 

முப்படை ராணுவ வீரர்கள் எங்கள் காவல் தெய்வங்கள் எந்தக் கட்சிக்கும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆணி செய்வதற்கு கூட அனுபவம் இல்லாத அம்பானி நிறுவனம் ரபேலில் அனுமதி பெற்றது.


தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை ரிமோட் கண்ட்ரோல் மத்திய அரசு  இயக்கப்பட்டு வருகிறது என ஓய்வு பெற்ற நீதிபதிகள் குற்றசாட்டிவருகின்றனர். மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு வருகிறோம். மத்திய, மாநில ஆட்சிகளை தூக்கி எறிய வேண்டும்.
 

காங்கிரஸ் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய கடன், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து செய்து, மாநில கல்வி பட்டய பட்டியலுக்கு கொண்டு செல்வோம் என பல்வேறு மக்கள் நலம் சார்ந்த  திட்டங்களை இடம் பெற செய்ததை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று மழை அடித்து ஓய்ந்தது போல் பேசிமுடித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் வைகோ!

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Vaiko returned home from the hospital

கடந்த மே மாதம் 25ஆம் தேதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலி வருகை தந்த போது எதிர்பாரா விதமாக இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது குணமடைந்து வந்தார்.

இதற்கிடையில், மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வைகோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து, 7 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைகோ, இன்று (02-06-24)  மாலை வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைகோ, இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். 

Next Story

'7 ஆயிரம் கிலோமீட்டர் நடந்துள்ளேன்; ஒரு இடத்தில்கூட விழுந்ததில்லை'-வைகோ உருக்கம்

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
 'I have walked 7 thousand kilometers; Never fell in a single place'-Vaico Melting

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவறி கீழே விழுந்த நிலையில் அவருக்கு  இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இந்நிலையில் தொண்டர்களுடன் உரையாற்றும் வகையில் வைகோ மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் துரை வைகோ வெளியிட்ட எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், 'மதிமுக இயக்கத் தந்தை தலைவர் வைகோ நலம் பெறுவார்; மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேலின் மகள் மண விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள். அப்பொழுது எதிர்பாரா விதமாக இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு வைகோ அவர்கள் உடல்நலம் பெறுவார்கள்; வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 'I have walked 7 thousand kilometers; Never fell in a single place'-Vaico Melting

இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ ஒன்றை பேசி வைகோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''அன்புள்ளம் கொண்ட தமிழ் பெருமக்களே, தமிழகத்தில் பொது ஊழியம் செய்கிற ஒரு சாதாரண தொண்டனாகிய இந்த வைகோ ஏறத்தாழ 7 ஆயிரம் கிலோமீட்டர் நடந்திருக்கிறேன். ஆனால் கீழே விழுந்ததில்லை. இப்பொழுது நான்கு நாட்களுக்கு முன்னால் நெல்லைக்குச் சென்ற இடத்தில் தங்கியிருந்த வீட்டின் படிகளின் வழியாக ஏறாமல் பக்கத்தில் இருக்கக்கூடிய திண்ணையில் ஏறினேன். அப்படியே இடது புறமாக சாய்ந்து விட்டேன். எனக்கு தலையில் அடிபட்டிருந்தாலோ, முதுகெலும்பில் அடிபட்டிருந்தாலோ நான் இயங்க முடியாமல் போயிருப்பேன். இடது தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து இருக்கிறது. அதோடு அந்த எலும்பும் கீறி இருக்கிறது. உடனே மருத்துவரிடம் காண்பிக்க அவர்கள் உடனே நீங்கள் சென்னைக்கு போக வேண்டும், அங்கே நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.

பயப்பட வேண்டாம் உங்களுக்கு ரெஸ்ட் தேவை. உங்களுக்கு ரெஸ்ட் இதில் கிடைத்திருக்கிறது என்று சொன்னார்கள். ஒருவேளை எனக்கு நாளைக்கே அறுவை சிகிச்சை நடைபெற்று அந்த கிண்ணம் தோள்பட்டையில் இருந்து விலகி இருக்கிறதல்லவா அதை திரும்ப பொருத்தி விட்டு, அதோடு சேர்ந்து எலும்பும் ஒரு இரண்டு சென்டிமீட்டர் உடைந்திருக்கிறது அதற்கும் சேர்த்து நாளைக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன். முழு ஆரோக்கியத்தோடு இருக்கிறேன். எனக்கு முன்புபோல இயங்க முடியுமா என்ற ஐயம் யாருக்கும் வர வேண்டாம். நான் உழைப்பு என்பதற்கு இலக்கணமாக இருக்கக்கூடியவன் என்பதை கலைஞரே சொல்லி இருக்கிறார். ஆகவே நம்முடைய தோழர்கள், பொதுவாழ்வில் அக்கறை உடையவர்கள் எல்லோருக்கும் நான் சொல்லிக் கொள்வது இந்த நாட்டில், மேலும் தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டிய சேவைகள் செய்வதற்கு காத்திருக்கும் வைகோ, முழு நலத்தோடு ஆரோக்கியத்தோடு வருவேன். எனக்காக கவலைப்படுகிற உள்ளங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்பதையும் இந்த நேரத்தில் சொல்கிறேன்'' என உருக்கமாக பேசியுள்ளார்.