TVK  said person who recruits the most members will be given responsibilities in the party

தமிழ் சினிமா நடிகரான விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான், அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கட்சியில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் நபர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2 கோடி உறுப்பினர்களைக் கட்சியில் சேர்ப்பதை இலக்காகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நபர்களுக்கு பொறுப்புகள் வழங்குவதில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பிரத்தியேக செயலி அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் அதில் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் எண்களை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.