அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராகடிடிவிதினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்பொதுக்குழுக்கூட்டம் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பழகன் தலைமையில் இன்று (06.08.2023) காலை சென்னைவானகரத்திலுள்ளதனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தபொதுக்குழுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடத்த முடிவுசெய்யப்பட்டது. இந்நிலையில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, கட்சியின் பொதுச்செயலாளராகடிடிவிதினகரனும், கட்சியின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலும், கட்சியின் துணைத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகனும் போட்டியின்றித்தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பதவிகளுக்குத்தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்சியின் விதிமுறைகளின்படி நான்கு ஆண்டுகள் பதவி வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.