கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நடத்திய விசாரணையில் அந்தத் தேர்வில் தவறுகள் நடந்திருப்பது உறுதியானது.அதன்படி, 99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. கண்டுபிடித்தது. அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இடைத்தரகர்களையும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து வருகின்றனர்.

ammk

இந்த நிலையில் நேற்று மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, தஞ்சை பெரிய கோவில் இருமொழிகளிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. இது வரவேற்கபட வேண்டியது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இல்லை. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறினார்.

மேலும் தமிழக அரசின் ஊழல்கள் வருகிற 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதங்களுக்கு பிறகு வெளிவரும், கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும். அதேபோல தமிழக அரசு ஊழியர்கள் வருகிற 21ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவரும் என கூறினார். இதனால் அதிமுகவினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.