Skip to main content

"பாரம்பரியமே நம் முழு கவசம்!" -அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் டிஜிட்டல் பிரச்சாரம்!

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

S. P. Velumani

 

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் ஊரடங்கு தளர்வுகளை மத்திய - மாநில அரசுகள் அறிவித்தாலும், கரோனா என்ற உயிர்க்கொல்லி இந்த மண்ணை விட்டு இன்னும் அழியவில்லை.

 

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் இருந்தவரை மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்திய பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றியது போல, ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனவும், அரசு வலியுறுத்திவரும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி வருகிறார். 

 

இதனைத் தொடர்ந்து, கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவது, சமூக விலகலைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்ற அவசியமான வழிமுறைகளை மக்கள் கடைப்பிடித்தாலும், நோய்த் தொற்றை தடுக்க அத்தியாவசியமான நோய் எதிர்ப்பு சக்தி மிக்க பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

 

S. P. Velumani

 

இதற்காக, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் பாரம்பரிய உணவு கலாச்சாரத்திற்கு ஆதரவாக டிஜிட்டல் பிரச்சாரம் தொடங்கியுள்ள அமைச்சர் வேலுமணி, 'அவசியம், அத்தியாவசியம்' என்ற  முழக்கத்துடன் பாரம்பரியமே நம் முழு கவசம் என்பதை வலியுறுத்தி தமது சமூக ஊடகங்களில்  பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 'உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்ற திருமூலரின் வாக்கு பொய்க்குமா? நம் பாரம்பரியம் காட்டிய வழியில், உடல் நலம் பேணி ஆரோக்கியம் பெறுவோம். உணவே மருந்து என்பதை உணர்ந்து நடப்போம் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

 

S. P. Velumani

 

மக்கள் அன்றாட வாழ்வில், மருத்துவக் குணங்கள் அடங்கிய  வேப்பிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிப்பது, மஞ்சள் பொடியை வெது வெதுப்பான தண்ணீரிலோ, பாலிலோ கலந்து குடிப்பது,  காலையில் இஞ்சிச் சாறு குடிப்பது, எலுமிச்சை சாறு, மிளகு, நெல்லிக்காய், பூண்டு ஆகிய நம்முன்னோர்கள் விட்டுச்சென்ற பாரம்பரிய மருத்துவ முறைகளே நம்மைப் பாதுகாக்கும் முதல் கவசம் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் டிஜிட்டல் பிரச்சாரம் தொடர்கிறது.

 

Ad

 

கரோனா வைரஸ் தமிழகத்தில் பரவும் முன்பே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. தமது துறை வழியாகவும், தனிப்பட்ட முறையிலும், கரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களை கடந்த மார்ச் மாதம் முதல், தமது ட்விட்டர், பேஸ்புக், இண்ஸ்டாகிராம், இணையத் தளம் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றால் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்பதை வலியுறுத்தி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக தமது சமூகவலைத்தள பக்கங்களின் முகப்பு பகுதியில் முகக்கவசம் அணிந்துள்ள புகைப்படத்தை பதிவுசெய்துள்ளார் அமைச்சர் வேலுமணி. இவரது டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் மத்திய சுகாதாரத் துறையின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கோவாக்சின் தடுப்பூசியால் பக்கவிளைவு?; இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம்

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
Medical Council of India Explanation on Covaccine Side Effects

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இதில், இந்த நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை வழக்கத்தில் கொண்டு வந்து அதை மக்களும் தவறாமல் போட்டு வந்தனர். கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. அதே போல், மற்றொரு தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டுபிடித்தது.

இதில், கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிஷீல்டை, மத்திய அரசு அனுமதியுடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம்  தயாரித்தது. இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் 70 சதவீதம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு வகையான தடுப்பூசிகளை, உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தினர். இதனால், இந்த நோய்த் தொற்று பரவலாக குறைந்து வந்து மக்களை பெருமூச்சடைய செய்தது.

தடுப்பூசிகளைப் பயன்படுத்தி நோய் தொற்றைக் கட்டுப்படுத்தி வந்த அதே வேளையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர் மரணங்களும், உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்தது. இந்தப் புகார்களை அடுத்து, இங்கிலாந்து நீதிமன்றத்தில், கோவில்ஷீல்டு கண்டுபிடிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனேகாவுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கோவிட் தடுப்பூசியான கோவிஷீல்டு சில நேரங்களில் ஏதேனும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை தரலாம் என்றும், ரத்தத்தில் உறைதல் ஏற்படலாம் என்றும், டிடிஎஸ் எனப்படும் (Thrombosis with Thrombocytopenia Syndrome ) பாதிப்பு வரலாம் என்றும் ஆஸ்ட்ராஜெனகா தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து, உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை வணிக காரணங்களுக்காக திரும்பப் பெறுவதாக ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்தது. 

இந்த நிலையில், கோவிட் தொற்றுக்கான மற்றொரு தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய 30 சதவீத பேர் பக்கவிளைவுகளை சந்திப்பதாக பனாரஸ் பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‘கோவிட் தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களில் 30 சதவீதம் பேருக்கு தோல் நோய், சதைப்பிடிப்பு, நரம்பியல் பாதிப்பு, உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டது. 

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி பனாரஸ் பல்கலைக்கழகத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவாக்சின் பக்க விளைவுகள் பற்றிய பனாரஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்விற்கு தங்களிடம் எந்தவித ஒப்புதலும் பெறவில்லை. கோவாக்சின் "பாதுகாப்பு பகுப்பாய்வை" முன்வைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த மோசமாக வடிவமைக்கப்பட்ட ஆய்விற்கு, தங்களுடன் தொடர்பு கொள்ள முடியாது. முறையாக ஆய்வு நடத்தாமல், பக்க விளைவு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. ஆய்வின் முடிவை திரும்ப பெற வேண்டும். ஆய்வை திரும்ப பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

கோவிஷீல்டு தடுப்பூசியைப் பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி!; பகீர் தகவலை ஒப்புக்கொண்ட நிறுவனம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
A company that has agreed to share information on coviShield vaccine takers beware!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றை கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இதில், இந்த நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை வழக்கத்தில் கொண்டு வந்து அதை மக்களும் தவாறாமல் போட்டு வந்தனர். கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. அதே போல், மற்றொரு தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்டிராஜெனேகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டுபிடித்தது. 

இதில், கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிஷீல்டை, மத்திய அரசு அனுமதியுடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம்  தயாரித்தது. இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் 70 சதவீதம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு வகையான தடுப்பூசிகளை, உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தினர். இதனால், இந்த நோய்த் தொற்று பரவலாக குறைந்து வந்து மக்களை பெருமூச்சடைய செய்தது. 

தடுப்பூசிகளை பயன்படுத்தி நோய் தொற்றைக் கட்டுப்படுத்தி வந்த அதே வேளையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர் மரணங்களும், உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்தது. இந்தப் புகார்களை அடுத்து, இங்கிலாந்து நீதிமன்றத்தில், கோவில்ஷீல்டு கண்டுபிடிப்பு நிறுவனமான ஆல்டிராஜெனேகாவுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆல்டிராஜெனேகா நிறுவனத்தோடு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் சேர்ந்து அறிக்கை ஒன்று தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில், ‘கோவிட் தடுப்பூசியான கோவிஷீல்டு சில நேரங்களில் ஏதேனும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை தரலாம். ஏதேனும் ஒரு சிலருக்கு இது போன்ற பாதிப்பு வருவது அரிதான விஷயம்தான். ரத்தத்தில் உறைதல் ஏற்படலாம், டிடிஎஸ் எனப்படும் (Thrombosis with Thrombocytopenia Syndrome ) பாதிப்பு வரலாம். இது எல்லோருக்கும் வருவதில்லை, மிக அரிதாக நடக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளது.