தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என பாஜக தேசிய செயலாளர்ஹெச். ராஜா மிரட்டியிருக்கிறார்.

Advertisment

bjp

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தேசிய குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், "திமுக, இந்து விரோத கட்சி அல்ல என மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். சமயபுரத்துக்கு ஸ்டாலின் பால் குடம் எடுக்கும் வரை இதனை நான் நம்பமாட்டேன். தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார் ஸ்டாலின். சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும். இதனைத்தான் விரும்புகிறார் ஸ்டாலின்.

Advertisment

மசூதிகள், தேவாலயங்ளின் நிர்வாகம் முஸ்லிம்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் இருக்கிறது. ஆனால் இந்து ஆலயங்களின் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. திமுக பிராமணர் எதிர்ப்பை கொள்கையாக கொண்டது. ஆனால் தற்போது பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் திமுக சரணடைந்துள்ளது " என ஆவேசமாக பேசியுள்ளார் ஹெச். ராஜா.