Their intention is to postpone the election EVKS interview

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதிகுட்பட்ட கச்சேரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நேற்று (06.04.2021) காலை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது குடும்பத்தினருடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, “தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். திமுக -காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிபெறும்.

5 தொகுதிகளில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக, தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருப்பது என்பது அவர்களின் தோல்வி பயத்தை வெளிக்காட்டுகிறது. 5 தொகுதிகள் மட்டுமல்ல, 234 தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக உள்ளது. மேலும் அதிமுக தோல்வி பயத்தால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்” என்று அவர் கூறினார்.