சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை. சம்மன் வந்தால் ஆஜராகி விளக்கம் அளிப்பேன். என்பிஆர் அவசியம், தேவை, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வரும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி பரப்பப்படுகிறது. அரசியல்வாதிகள் தங்களது சுய லாபத்துக்காக தூண்டிவிடுகின்றனர். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன். மாணவர்கள் எதையும் ஆராயாமல் போராட்டம் செய்தால் அரசியல்வாதிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. என்சிஆர் இன்னும் அமல்படுத்தப்படவில்லை; அதுகுறித்து ஆலோசித்துதான் வருகின்றனர். நான் நேர்மையாக வரி செலுத்துகிறேன்; எந்த சட்ட விரோத தொழிலும் செய்யவில்லை." இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Advertisment

mla

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில், ரஜினி பேச்சு குறித்து, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த தமிமுன் அன்சாரி, கந்துவட்டி உள்ளிட்ட சட்ட விரோத தொழில்களை ரஜினி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், இதிலிருந்து தன்னை காப்பற்றிக் கொள்வதற்காக, மத்திய பாஜக அரசை திருப்திப்படுத்துவதற்காக இப்படிப் பேசி வருகிறாரோ என்று எங்களுக்கு சந்தேகம் வருகிறது. சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய சட்டங்கள் குறித்து ரஜினிக்குப் போதிய ஆழமான பார்வை இல்லை. சிஏஏ சட்டத்தில் மதப்பாகுபாடு காட்டப்படுகிறது என நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம். இலங்கைத் தமிழர்களையும் பாதிக்கிறது. என்ஆர்சி, என்பிஆர் சட்டங்கள் முஸ்லிம்களை மட்டுமல்ல அனைத்து மதத்தினரையும் பாதிக்கும், அதற்கு எடுத்துக்காட்டாக அசாம் மாநிலம் உள்ளது.

ரஜினிகாந்தின் முன்னோர்களின் ஆவணங்களைக் கேட்டால், அதற்கான ஆதாரத்தை காட்டத் தயாராக இருக்கிறாரா? அந்த ஆவணங்கள் அவரிடம் இருக்கிறதா? இப்படி அடிப்படை விஷயங்கள் கூட தெரியாமல் பேசுகிறார். போராட்டங்களை அரசியல் கட்சிகள் தூண்டி விடுவதாகப் பேசுகிறார். நாட்டின் யதார்த்த நிலை தெரியாமல் பேசி வருகிறார். எந்த தலைவர்களின் கட்டுப்பாட்டாலும் போராட்டங்கள் இப்போது நடைபெறுவது இல்லை. மக்களே தன்னெழுச்சியாகப் போராடுகின்றனர். எந்தத் தலைவர்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். மக்களைச் சமாதானப்படுத்தும் நிலையில் தான் மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் இருக்கிறது. ரஜினியின் பேச்சு கண்டனத்துக்குரியது.

Advertisment

ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும் என்று பேசுகிறார். எந்த ஈழத் தமிழர் இவரிடம் இரட்டைக் குடியுரிமை கேட்டார்? ஈழத் தமிழர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும். அவர்கள் இந்தியக் குடியுரிமையைத்தான் கேட்கின்றனர். ரஜினி தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பேச வேண்டும். தெரியாத விஷயங்கள் குறித்து மவுனமாக இருப்பது தான் மரியாதை" என தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.