Skip to main content

தமிழ்நாடு என்றால் பிரிவினைவாதமா? - பாஜகவுக்கு தம்பிதுரை கேள்வி

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

thambidurai talks about tamilnadu name and against for bjp stand

 

எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை  பேசும் போது, "தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் உள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் பாடப்புத்தகத்தில் 1915 ஆம் ஆண்டு பாரதியார் எழுதிய சொற்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தமிழ்நாடு எனக் குறிப்பிடுங்கள் என அப்போதே பாரதியார் குறிப்பிட்டுள்ளார்.

 

பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டின் பெயரை நாடாளுமன்றமும் சட்டமன்றமும் ஏற்றுக்கொண்டு சட்டப்பூர்வமாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்காகத்தான் ஒவ்வொரு தமிழரும் பாடுபட்டனர். பாரதியாரால் போற்றப்பட்ட; அண்ணாவால் சூட்டப்பட்ட பெயரை சொன்னால்; அண்ணா, பெரியார் பெயரை சொன்னால் பிரிவினைவாதிகள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. திராவிட இயக்கத்தை பார்த்து குறை சொன்னால் மனம் வேதனை அடைகிறது.

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்கள் மொழியுணர்வும் கலாச்சாரப் பண்பாட்டு உணர்வும் மிக்கவர்கள். அதற்காகத்தான் திராவிட இயக்கம் உருவாகியது. இதையெல்லாம் குறிப்பிட்டுப் பேசினால் பாஜகவினர் நம்மைப் பிரிவினைவாதிகள் என்று சொல்கின்றனர். இப்படிப்பட்ட கருத்துக்களை பாஜகவினர் பரப்பலாமா? பாஜகவினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.