தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 3 உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 3 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் என்.சந்திரகேகரன் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று இடங்களில் கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒருஇடம் ஒதுக்கப்பட, இரண்டு சீட்கள் அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

admk

Advertisment

அதிமுக தலைமையின் இந்த அறிவிப்பால் கட்சியில் இருக்கும் சீனியர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கட்சியில் இருக்கும் சீனியர்களான கே.பி.முனுசாமி, மைத்ரேயன், தம்பிதுரை, நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா என பலரும் அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்பட்டது. இதில் எடப்பாடியின் ஆதரவாளரான தம்பிதுரைக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் பெயரை அதிமுக தலைமை அறிவிக்கவில்லை. இது பற்றி விசாரித்த போது, நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவை பற்றி அதிக விமர்சனம் செய்தவர் தம்பிதுரை. அதனால் பாஜக தலைமை அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.அதன் அடிப்படையிலேயே அவருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.